நல்லா பார்த்துக்குங்க நானும் இருக்கேன்...பிரபுதேவாவின் 'முக்காபுலா'வில் அடம் பிடித்து இணைந்த ஹீரோ

By

Recommended Video

DABANGG 3 PRESS MEET | SALMAN KHAN | PRABHU DEVA | FILMIBEAT TAMIL

சென்னை: முக்காலா முக்காபுலா பாடலின் புதிய வெர்சனில் அடம் பிடித்து, பிரபுதேவாவுடன் இணைந்து ஆடியுள்ளார் இந்தி ஹீரோ.

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம், காதலன். ஹீரோயினாக நக்மா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. அதில் ஒன்று, முக்காலா முக்காபுலா.

மெகா ஹிட்டான இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா ஆடிய நடனம் பிரபலமானது. தமிழில் வெளியான இந்தப் படம் இந்தியில், ஹம்சே ஹே முக்காபுலா என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

ஸ்ட்ரீட் டான்சர் 3டி

ஸ்ட்ரீட் டான்சர் 3டி

இதையடுத்து இந்தியிலும் பிரபுதேவா பிரபலமானார். இந்தப் படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. பிரபுதேவா, இப்போது 'ஸ்ட்ரீட் டான்சர் 3டி' என்ற டான்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரத்தா கபூர்

ஸ்ரத்தா கபூர்

இதை நடன இயக்குனர் ரெமோ டிசோசா இயக்குகிறார். இதில் வருண் தாவன், ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. இதில் பிரபுதேவாவின் முக்காலா முக்காபுலா பாடலின் புதிய வெர்சன் இடம் பெற்றுள்ளது. பிரபுதேவா நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பிரபுதேவாவுக்கு கவுரவம்

பிரபுதேவாவுக்கு கவுரவம்

இதுபற்றி இயக்குனர் ரெமோ டிசோசா கூறும்போது, பிரபுதேவாவை கவுரவிக்கும் விதமாக, முக்காலா முக்காபுலா பாடலின் புதிய வெர்ஷனை சேர்த்துள்ளோம் என்றார். இந்நிலையில் இந்தப் பாடலில் பிரபுதேவாவும் ஸ்ரத்தா கபூரும் மட்டுமே ஆடுவதாக முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

வருண் தாவன்

வருண் தாவன்

ஆனால், பிரபுதேவாவுடன் நானும் ஆட வேண்டும் என்று அடம் பிடித்தார் வருண் தாவன். அந்த வாய்ப்பை இழந்துவிட விரும்பவில்லை என்றார். இதையடுத்து அவரையும் ஆடவைத்து படமாக்கியுள்ளனர். இதை இயக்குனர் டிசோசா தெரிவித்துள்ளார். படம் ஜனவரி மாதம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X