புகைப்படக் கலைஞர் கால் மீது காரை ஏற்றிய பாலிவுட் நடிகர்.. வைரலாகும் வீடியோ!
மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவான், புகைப்படக் கலைஞர் ஒருவரின் கால் மீது காரை ஏற்றியுள்ள சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தில்வாலே, ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்சர் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் வருண் தவான்.
கடந்த ஜனவரியில் வருண் தவான், பிரபுதேவா, ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீட் டான்சர் 3டி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

எதிர்பாராத விதமாக
பாலிவுட் நடிகர்கள் எங்கே சென்றாலும், அவர்களை சுற்றி ரசிகர்கள் கூட்டமும், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் மீடியாக்கள் அதிகளவில் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று வருண் தவான் சென்ற கார், புகைப்படக் கலைஞர் ஒருவரின் கால் மீது எதிர்பாராத விதமாக ஏறியுள்ளது.

உடனடியாக
புகைப்படக் கலைஞர் மீது பாலிவுட் நடிகர் வருண் தவானின் கார் இடித்த நிலையில், உடனடியாக மற்ற புகைப்படக் கலைஞர்கள் எல்லாம் குரல் எழுப்பி சத்தம் போட ஆரம்பித்தனர். சம்பவம் குறித்து அறிந்த வருண் தவான், உடனடியாக டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, கீழே இறங்கி அந்த நபருக்கு என்ன ஆனது என அருகில் சென்று பார்த்தார்.
என்ன ஆச்சு
ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த புகைப்படக் கலைஞருக்கு, பெரிய அடியோ, காயமோ படவில்லை என்றும், லேசான காயம் தான் என்பதை அறிந்த வருண் தவான், அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான வீடியோக்களும் பாலிவுட் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

வருங்கால மனைவியுடன்
நடிகர் வருண் தவான், தனது வருங்கால மனைவி நடாஷா தலால் உடன் பிரபல பாலிவுட் இயக்குநர் சஷான்க் கைத்தான் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று திரும்பும் வழியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகைப்படக் கலைஞருக்கு பெரிய அடியோ, கால் முறிவோ ஏற்படாத நிலையில், வருண் தவான், சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துள்ளார்.

அடுத்த படம்
வருண் தவானின் தந்தை டேவிட் தவான் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி நம்பர் 1 படத்தில் வருண் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











