மாரடைப்பால் உயிரிழந்த கார் டிரைவர்.. உடைந்துப் போன பிரபல நடிகர்.. என்ன பண்ணியிருக்காரு பாருங்க!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது கார் டிரைவர் மரணத்தால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.
Recommended Video
கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மேல் தனக்கு கார் டிரைவராக இருந்த மனோஜ் சாஹு என்பவரின் மறைவால் மிகவும் வாடிப் போயுள்ள வருண் தவான் அவருக்காக பதிவிட்ட உருக்கமான போஸ்ட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கடித்துள்ளது.
ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் வருண் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் தவான்
ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த வருண் தவான் அடுத்ததாக 2010ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பிரபல பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகனான இவர் பத்லாபூர், ABCD 2, ஜூத்வா 2, கலன்க், ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி, கூலி நம்பர் ஒன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

டிரைவர் மரணம்
நடிகர் வருண் தவானின் குடும்ப டிரைவரான மனோஜ் சாஹு கடந்த ஜனவரி 18ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததும் நடிகர் வருண் தவான் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

26 வருடங்கள்
36 வயதாகும் நடிகர் வருண் தவான் குடும்பத்தில் கிட்டத்தட்ட 26 வருடங்கள் கார் டிரைவராக இருந்தவர் மனோஜ் சாஹு. சுமார் 10 வயது முதல் இருந்தே மனோஜ் சாஹு ஓட்டும் காரில் தான் நடிகர் வருண் தவான் பயணம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஹீரோவான பிறகு அவருக்கான தனிப்பட்ட டிரைவராகவும் இத்தனை வருடங்கள் செயல்பட்ட நபரின் இழப்பு நடிகர் வருண் தவானை பெரிதும் பாதித்துள்ளது.

கடற்கரை மணலில்
சனிக்கிழமையான இன்று கடற்கரை மணலில் மனோஜ் பாய் மிஸ் யூ சோ மச் என ஹார்ட்டீன் போட்டு அவரது பெயரை அதனுள் எழுதி அதன் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் வருண் தவான் ஷேர் செய்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கார் டிரைவரையும் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து வருண் தவான் வருந்துவதை ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

டிரைவருடன் வீடியோ
கடந்த 2018ம் ஆண்டு மேடம் டுசாட்ஸில் நடிகர் வருண் தவானை சிறப்பிக்கும் விதமாக ஆளுயுர உருவ சிலை நிருவப்பட்டது. அந்த விழாவில் தனது கார் டிரைவரை அறிமுகப்படுத்தி இவர் தன்னுடன் பல வருடங்கள் பயணித்த நல்ல உள்ளம் கொண்டவர் என பாராட்டி இருந்தனர். தற்போது அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. வருண் தவான் நடிப்பில் ஜக் ஜக் ஜியோ மற்றும் பிடியா உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன.


Click it and Unblock the Notifications











