மாஸ் அப்டேட்.. ஷாருக்கான் இல்லை.. தெறி இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் பேக் டு பேக் பாக்ஸ் ஆஃபிஸ் படங்களை கொடுத்து டாப் இயக்குநர் ஆன அட்லி, அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்கவுள்ளார்.

Recommended Video

தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரவிதேஜா-வீடியோ

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இயக்குநர் அட்லி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷாருக்கான் படத்திற்கு முன்னதாக நடிகர் வருண் தவானை வைத்து தெறி படத்தின் இந்தி ரீமேக்கை எடுக்க அட்லி முயற்சி செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

300 கோடி வசூல்

300 கோடி வசூல்

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்த இயக்குநர் அட்லி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். பிகில் படம் 300 கோடி வசூல் செய்ததை தொடர்ந்து பாலிவுட் அழைப்பு அட்லி கதவை தட்டியது.

ஷாருக்கானுடன்

ஷாருக்கானுடன்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை இயக்குநர் அட்லி இயக்கப்போவதாக செய்திகள் பரவின. சங்கி எனும் தலைப்பில் டபுள் ஆக்‌ஷன் ரோலில் ஷாருக்கான் நடிக்க உள்ளார் என்றும் தொடர்ந்து ஷாருக்கான் தயாரிப்பில் 3 படங்களை அட்லி இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால், இதுவரை அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

தெறி ரீமேக்

தெறி ரீமேக்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் திட்டத்திலும் இயக்குநர் அட்லி ஈடு பட்டு வருகிறார். ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் அட்லி இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல் கசிந்து வரும் நிலையில், தனது அடுத்த கட்ட முயற்சியை இயக்குநர் அட்லி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ யார்

ஹீரோ யார்

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் தெறி படத்தில் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பாலிவுட்டின் இளம் ஹீரோவான வருண் தவான், சமீபத்தில் ரெமோ டி சோசா இயக்கத்தில் பிரபுதேவா, ஷ்ரத்தா கபூர், நோரா ஃபத்தேஹி நடிப்பில் வெளியான ஸ்ட்ரீட் டான்சர் 3டி படத்தில் நடித்திருந்தார்.

விரைவில்

விரைவில்

வரும் மே 3ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் லாக்டவுன் தளர்வுகள் ஏற்பட்டால், இயக்குநர் அட்லி தனது பாலிவுட் என்ட்ரி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் இரண்டு படங்கள் முடித்த பிறகே மீண்டும் கோலிவுட் பக்கம் அட்லி திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X