அடிச்சான்பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர்.. இந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே.. ஹீரோ யாரு தெரியுமா?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து இந்த ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தமிழ் மொழியை போலவே தெலுங்கிலும் அந்த படம் அப்படியே டப் செய்யப்பட அங்கேயும் வசூலை அள்ளியது.
இந்நிலையில், அடுத்து பாலிவுட்டில் லவ் டுடே திரைப்படம் ரீமேக் ஆகப் போவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன.
ஆனால், இந்தி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு பதிலாக பிரபல பாலிவுட் இளம் நடிகர் நடிக்கப் போகிறாராம்.

எதிர்பார்க்காத ஹிட்
கோமாளி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார் என்றதுமே எதுக்கு இவருக்கு வேண்டாத வேலை என இண்டஸ்ட்ரியிலேயே பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், லவ் டுடே படம் வெளியான பின்னர் பிரதீப் ரங்கநாதனை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் அளவுக்கு நடித்து படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கி விட்டார்.

ஸ்மார்ட்போன் தான் கதையே
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக உள்ளனர். ஏகப்பட்ட பிரைவசிகள் கணவன் மனைவிக்குள்ளே இருக்கிறது. காதலர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் செல்போன்களை மாற்றிக் கொண்டால் என்ன ஆகும் என்றும் காதலுக்கு முக்கியமான ஒன்றே நம்பிக்கை என்பதையும் அழகாக சொல்லி அதிரடி ஹிட் கொடுத்த படம் லவ் டுடே.

தெலுங்கில் டப்பிங்
தமிழில் வெளியான லவ் டுடே திரைப்படத்தை அப்படியே தெலுங்கில் சும்மா டப் மட்டுமே செய்து அங்கே ரிலீஸ் செய்தனர். ஆனால், அங்கேயும் அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அடுத்த கட்டமாக லவ் டுடே படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகப் போகிறதாம்.

ரீமேக்வுட்
இந்த ஆண்டு மட்டும் பாலிவுட்டில் 22க்கும் மேற்பட்ட படங்கள் ரீமேக் படங்கள் தான். அதிலும் தென்னிந்திய மொழிப் படங்களும் குறிப்பாக தமிழ் படங்களும் ஏராளம் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யங்ஸ்டர்ஸை கவரும் விதமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளிய லவ் டுடே படத்தை மட்டும் சும்மா விடுவார்களா என்ன? அந்த படத்தையும் விரைவில் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில்
இந்தி படங்களை தமிழ், தெலுங்கிலும் தமிழ் படங்களை பாலிவுட்டிலும் தயாரித்து வருகிறார் போனி கபூர். துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரையும் கவர்ந்துள்ளது லவ் டுடே திரைப்படம். இந்நிலையில், அதன் இந்தி ரீமேக்கை போனி கபூர் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருண் தவான் தான் ஹீரோ
போனி கபூர் தயாரிக்கும் லவ் டுடே படத்தை டேவிட் தவான் இயக்க பாலிவுட்டின் இளம் ஹீரோ வருண் தவான் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். வருண் தவானுக்கு ஜோடியாக போனி கபூரின் மகள் ஜான்வி கபூரே நடிப்பாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. இந்தியிலும் லவ் டுடே என்கிற டைட்டிலையே வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தி ரீமேக் ரைட்ஸ் பல கோடிகளுக்கு பிசினஸ் ஆகி உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











