கெட்டப்பை மாற்றி.. அதிரடி வில்லனாக மாறினார்.. வருண்!
சென்னை : சீறு படத்தின் மூலம் அதிரடி வில்லனாக மாறி இருக்கிறார் வருண்.
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் சீறு. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் தள்ளி போய் உள்ளது .

சீறு படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. வெளியாகியது முதல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஒரு வில்லனாக நவ் தீப்பும் மறுபுறம் வருணும் நடித்து உள்ளனர். நடிகர் வருண் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.

நடிகர் வருண் பப்பி படத்தின் நாயகனாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு சட்டென்று இந்த படத்தின் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார். சீறு படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது வருண் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது தெரிகிறது. மேலும் பல சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறார்.

இவர் தலைவா படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். அதன் பின் துணை நடிகராக நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். வனமகன் படத்தில் கூட ஒரு சிறிய வில்லதனமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின் கௌதம் மேனனின் ஜோசுவா படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்து உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருப்பதால் அந்த படம் வெளியாக தாமதமாகி வருகிறது .

இந்த நேரத்தில் சட்டென்று ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியத்தை கொடுத்து உள்ளார் வருண். சீறு படத்திற்காக தனது பாடி லாங்குவேஜ் முதல் தோற்றம் வரை பல மாறுதல்களை செய்து இருக்கிறார். பார்ப்பதற்கு வில்லதனம் பொருந்திய கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்.
சீறு படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கி இருக்கிறார். மேலும் வருண், வினோதன் படத்திலும் நாயகனாக நடித்து இருக்கிறார் அந்த படம் சில காரணங்களுக்காக தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது. அந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











