என் செங்கோல் தான் விஜய் ரசிகர்களுக்கு சர்கார்: வருண் ராஜேந்திரன் பெருமிதம்
Recommended Video

சென்னை: என் செங்கோல் தான் விஜய் ரசிகர்களுக்கு சர்கார் என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்று கூறி நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன்.
கதை திருட்டு விவகாரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது,

சர்கார்
என் செங்கோலை இழந்துவிட்டேன். ஆனால் என் செங்கோல் தான் விஜய் ரசிகர்களுக்கு சர்கார். அவர்கள் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கதைக்கு கிரெடிட் மட்டுமே கேட்டேன். சர்கார் என் கதை. என் பல ஆண்டு கடின உழைப்பு தான் செங்கோல். என் உழைப்புக்கு அர்த்தம் கிடைக்க விரும்பினேன். அதை பணம் கொடுத்து வாங்க முடியாது.

பணம்
என் வேலைக்கு அங்கீகாரத்தை கேட்டேன். கதைக்காக நான் பணம் கேட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. செங்கோல், சர்கார் கதை ஒன்று தான் என்பதை கண்டுபிடித்தேன். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை நாடினால் நியாயம் கிடைக்கும் என்று நினைத்தேன். அவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் வருண்.

கதை
சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் நான் தான் என்று ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். வருண் தன்னை போன்றே ஒரு கருவை யோசித்து அதை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ததால் அவரின் யோசனையை பாராட்டி மட்டுமே சர்கார் படத்தில் ஒரு கடிதம் வெளியிடப்படுகிறது என்று முருகதாஸ் கூறியுள்ளார்.

ரசிகர்கள்
கதை திருட்டு விவகாரம் தொடர்பாக சர்கார் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுமோ என்று ரசிகர்கள் பயந்த நிலையில் பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.


Click it and Unblock the Notifications











