Don't Miss!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- News
இளைஞர்களே வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! உங்களிடம் திறமையிருந்தால் அரசே முதலீடு செய்யும்! முழு விவரம்!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
வருணின் மிரட்டலான ஜோஸ்வா டிரைலர்...பிக்பாஸ் மேடையில் வெளியிட்ட கமல் !
சென்னை : நடிகர் வருண் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினர் ஆவார். வருண், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வருவதற்கு முன் ஜோஸ்வா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
2021ல்
வெளியான
மிகச்சிறந்த
4
த்ரில்லர்
படங்கள்!
கெளதம் மேனன் எழுதி, இயக்கி உள்ள ஜோஸ்வா இமை போல் காக்க படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. வருண், ராஹேல் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். கிருஷ்ணா, யோகி பாபு, மன்சூர் அலி கான், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

கொரோனாவால் தாமதம்
2020 ம் ஆண்டின் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த படத்தின் கார் ஃபைட், சேஷிங் காட்சிகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் படமாக்கினர். இந்த படத்தை விரைவில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்
ஜோஸ்வா படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக விக்னேஷ் சிவன் எழுதிய ஹே லவ் பாடல் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. செகண்ட் சிங்கிள் 2020 ம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில்,மூன்றாவது சிங்கிள் சமீபத்தில் டிசம்பர் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

டிரைலர் ரிலீஸ்
தற்போது ஹீரோ வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் படத்தின் டிரைலரை, கமலை வைத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக சமீபத்தில் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று வருண் வெளியேறுவதால், ஜோஸ்வா படத்தின் டிரைலரை கமலை வைத்து வெளியிட்டுள்ளனர்.

அசந்து போன ஹவுஸ்மேட்ஸ்
அதிரடி, ஆக்ஷன், லவ் நிறைந்த இந்த டிரைலர் மற்ற போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் போட்டு காண்பிக்கப்பட்டது. இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் ஜோஸ்வா படம் பற்றிய வருண் அதிகம் சொல்லாமல் இருந்ததால், இந்த டிரைலரை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நீயாடா இது என வருணை ஆச்சரியமாக கேட்டனர்.

கேக்கிலும் ஜோஸ்வா
இரண்டு நாட்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் வருணின் பிறந்தநாளுக்காக கேக் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது ஜோஸ்வா பட ஸ்டில் உடன் ஜோஸ்வா வருண் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் டிரைலரே இந்த அளவிற்கு மிரட்டலாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.