நான் யாருனு காட்டுறேன்… சிபியின் தலைவர் பதவியை தட்டிப்பறித்த வருண் !

சென்னை : நாணயத்தை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டில், இந்தவார தலைவரானார் வருண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 3ந் தேதி தொடங்கியது. இதில், இமான் அண்ணாச்சி, இசைவாணி, சின்னப்பொண்ணு, நிரூப், அக்ஷரா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், நாடியா சாங், பிரியங்கா, பவானி, ஸ்ருதி,சிபி, வருண், ராஜு என 18 போட்டியாளர்களுடன் போட்டி தொடங்கப்பட்டது.

இதில் நமிதா சொந்த காரணங்களால் வெளியேறினார். இதையடுத்து, நாடியா சாங் மற்றும் அபிஷேக் வெளியேறினர். நேற்று மூன்றாவதாக எலிமினேட்டாக சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார்.

கப்பு முக்கியம் பிகிலு

கப்பு முக்கியம் பிகிலு

திங்கட் கிழமை என்பதால் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில், ராஜூ மற்றும் சிபி போட்டியிட்டனர். டாஸ்கின் பெயர், கப்பு முக்கியம் பிகிலு, இந்த போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் நடத்தப்பட்டது. போட்டியாளர்களுக்காக ஒரு சேற்றுக்குழி இருக்கும், ஒரு ஜிம் பந்து சேற்றின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு கோள் போஸ்டுகள் மண் களவைக்கு வெளியே எதிர் எதிராக வைக்கப்பட்டு இருந்தன.

சிபி தலைவரானார்

சிபி தலைவரானார்

இதில் போட்டியாளர்கள் பந்தை கால்களை பயன்படுத்தி உதைத்து கோள் போஸ்டுக்கு அடிக்க வேண்டும். பஸ்சர் முடிவதற்குள் கோள் போஸ்டுக்குள் அதிகமுறை யார் பந்தை அடித்தார்களோ அவர்களே இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதில் 3 முறை பந்தை கோள் போஸ்டில் அடித்து சிபி இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்படடார்.

நாணயத்தை பயன்படுத்திய வருண்

நாணயத்தை பயன்படுத்திய வருண்

இதையடுத்து, நாணயத்தை வைத்திருக்கும், இசைவாணி,பவானி, வருண், ஸ்ருதி, நிரூப்பை அழைத்த பிக் பாஸ் இந்த நாணயத்தை பயன்படுத்தி இந்த வாரத்திற்கான தலைவரை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்டார். இதையடுத்து, வருண் தன்னிடம் உள்ள நாணயத்தை பயன்படுத்தி சிபிக்கு பதிலாக நான் தலைவராக மாறி இருப்பதாக கூறினார்.

வருண் இந்த வாரத் தலைவர்

வருண் இந்த வாரத் தலைவர்

வருண் நாணயத்தை பயன்படுத்தி தலைவரை மாற்றி உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை பாத்ரூம்மை இந்த வாரம் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவித்த பிக் பாஸ், இந்த வாரத்தின் தலைவராக வருண் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து, வருணை மற்ற போட்டியாளர்கள் வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X