Varun Tej weds Lavanya Tripathy: இத்தாலியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்.. வருண் தேஜ் - லாவண்யா செம!

சென்னை: தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

Varun Tej ties knot to Lavanya Tripathy at Italy and marriage photos out now

அவர்களுடன் மண மக்கள் அழகாக தரையில் அமர்ந்துக் கொண்டு எடுத்த புகைப்படம் மற்றும் திருமண புகைப்படங்கள் தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம்: தெலுங்கு நடிகர்களான வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன்பாக கோலாகலமாக நடைபெற்ற நிலையில், தற்போது இத்தாலியில் ட்ரீம் வெட்டிங்கை இந்த நட்சத்திர ஜோடியினர் முடித்துள்ளனர்.

Varun Tej ties knot to Lavanya Tripathy at Italy and marriage photos out now

கோனிடேலா குடும்பத்தின் திருமணமான இதில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களும் உறவினர்களுமான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை மனதார வாழ்த்தி உள்ளனர்.

Varun Tej ties knot to Lavanya Tripathy at Italy and marriage photos out now

குடும்பத்துடன் கொண்டாட்டம்: கோனிடேலா குடும்பம் மற்றும் ராம்சரண் மனைவியின் உபாசனாவின் காமினேனியின் குடும்பம் என ஒட்டுமொத்த டோலிவுட்டின் பெரிய குடும்பங்களும் இந்த திருமணத்துக்காக இத்தாலி சென்ற நிலையில், அங்கே குடும்பங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Varun Tej ties knot to Lavanya Tripathy at Italy and marriage photos out now

சிரஞ்சீவி - பவன் கல்யாண்: அண்ணன் தம்பியான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் இருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், ஒட்டுமொத்த டோலிவுட் ரசிகர்களும் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியை வாழ்த்தி வருகின்றனர்.

மேலும், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் திருமண விழாவில் மாஸ் காட்டிய நிலையில், அவர்களது ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் #VarunLav ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து: லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், கோலிவுட் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இந்த நட்சத்திர ஜோடியினருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X