மறுபடியும் பிகில் பார்த்த வரலக்ஷ்மி.. இந்தவாட்டி யாரு கூட போனாங்க தெரியுமா?
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை, தனது Save Sakthi ஃபவுண்டேஷன் குழந்தைகளுடன் சென்று பார்த்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி.
Recommended Video
சென்னை: விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த நடிகை வரலக்ஷ்மி, பிகில் படத்தை இரண்டாம் முறையாக தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார்.
ரோகிணி திரையரங்கில் தனது Save Sakthi ஃபவுண்டேஷன் குழந்தைகளுடன் விஜய்யின் பிகில் திரைப்படத்தை பார்த்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

என்ன ஆச்சு?
கடந்த ஆண்டு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு கோலிவுட்டில் தொடர்ந்து பல படங்கள் ரிலீசாகின. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு போட்டியாக இவரும் கிட்டத்தட்ட 6 படங்களில் தலை காட்டி சென்றார். சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் மிரட்டல் வில்லியாக நடித்தார். இந்த ஆண்டு நீயா 2 படத்தில் மட்டுமே இதுவரை தலைகாட்டியுள்ளார். இவர் நாயகியாக நடித்த வெல்வட் நகரம் படமும் என்ன ஆச்சு என தெரியவில்லை.

விஜய் ரசிகை
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தீவிரமான விஜய் ரசிகை, பிகில் படம் ரிலீசான முதல் நாளே முதல் காட்சியை இயக்குநர் அட்லியுடன் சென்று பார்த்தார். பெண்களுக்கான முக்கியத்துவத்தை பிகில் திரைப்படம் நன்றாக வெளிப்படுத்தியுள்ளது என பாராட்டு பத்திரமும் கொடுத்திருந்தார்.

குழந்தை மனசு
சில படங்களில் வில்லியாக நடித்தாலும் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு உண்மையில் குழந்தை மனசு தான். பெண்களுக்காகவும், குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் Save Sakthi என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது வருமானத்தில் ஒரு பங்கு தொகையை அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவு செய்து வருகிறார்.
சிறப்பு திரையிடல்
தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம், திங்கட்கிழமையான நேற்று, பல திரையரங்குகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ரோகிணி திரையரங்கில் ஒரு காட்சியை முழுவதுமாக தனது தொண்டு நிறுவன குழந்தைகளுக்காக புக் செய்த நடிகை வரலக்ஷ்மி, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பிகில் திரைப்படத்தை பார்த்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











