சிவனாண்டி பெத்த மக சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆகிடுச்சு.. ஸ்ரீதிவ்யா எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரிலீசாகி 10 ஆண்டுகளை கடந்த நிலையில் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன.

போஸ் பாண்டி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் சிவனாண்டி கதாபாத்திரத்தில் சத்யராஜும் காமெடியில் கலக்க ஊதா கலர் ரிப்பன் போட்டுக்கொண்டு இளைஞர்களை கவர்ந்தவர் தான் லதா பாண்டி ஸ்ரீதிவ்யா.

Varuthapadatha Valibar Sangar Sridivya latest photos trending in social media

நடிகை ஸ்ரீதிவ்யா: வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து காக்கி சட்டை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.

அதன் பின்னர், விஷாலுடன் இணைந்து மருந்து படத்திலும் கார்த்தியுடன் காஷ்மோரா படத்திலும், ஜிவி பிரகாஷ் உடன் பென்சில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரெமோ படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?: கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரித்திவிராஜ் நடித்த ஜனகனமன படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் ரெயிட் எனும் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், சிவகார்த்திகேயனுடன் செட் ஆனது போல சரியான ஜோடி பொருத்தம் ஸ்ரீதிவ்யாவுக்கு வேறு யாருடனும் பொருந்தவில்லை என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 படமும் வர வேண்டும் என்கின்றனர்.

Varuthapadatha Valibar Sangar Sridivya latest photos trending in social media

இந்நிலையில், தனது லேட்டஸ்ட் செல்ஃபி போட்டோக்களை ஷேர் செய்த ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளதாக பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

சிவனாண்டி பெத்த மகளா இது: சேலை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டும் சேரில் சாய்ந்து செம க்யூட்டாக நாக்கை நீட்டி சிரித்தபடியும் போஸ் கொடுத்த ஸ்ரீதிவ்யாவை பார்த்த ரசிகர்கள் நம்ம சிவனாண்டி பொண்ணா இப்படி வளர்ந்திருக்கு என கமெண்ட் போட்டு வருகின்றனர். மீண்டும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாங்க என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X