twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஜெயில்' ரிலீஸ்... 'உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகுது...' இயக்குனர் வசந்தபாலன் எமோஷனல் போஸ்ட்

    By
    |

    சென்னை: தான் இயக்கியுள்ள ஜெயில் படம் ரிலீஸ் ஆகாததால், இயக்குனர் வசந்தபாலன் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

    தமிழில், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உட்பட சில படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.

    Recommended Video

    ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்ணதியின் கதாபாத்திரம்

    இப்போது ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். ராதிகா, அபர்ணதி, ரோனித் ராய், சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளார்.

    என் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் காரணமா? அவர் என் நலம் விரும்பி... அமலா பால் அதிரடி விளக்கம் என் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் காரணமா? அவர் என் நலம் விரும்பி... அமலா பால் அதிரடி விளக்கம்

    கண்டிப்பாகப் பேசப்படும்

    கண்டிப்பாகப் பேசப்படும்

    கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிகிஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஶ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், பொன். பார்த்திபன் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருடமே முடிந்துவிட்டது. படம் பார்த்தவர்கள், இந்தப் படம் கண்டிப்பாகப் பேசப்படும் என்றும் கூறி வருகின்றனர்.

    பின்னணி இசை

    பின்னணி இசை

    தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு ஏரியாவை கதையில் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்துக்கு பின்னணி இசை அமைத்த ஜி.வி.பிரகாஷை, இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் பாராட்டி இருந்தார். அவர், 'ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை முடிந்தது. ஜீவியின் விரல்களில் வழிந்த இசை, என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது.

    இசையின் மொழி

    இசையின் மொழி

    தவிர்க்க முடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது. காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமண தம்பதி போல கைகோர்த்து கொண்டு என் முன் உலாவர கண்ணீர் என்னையறியாமல் விழியில் வழிந்தது. என் இசையின் மொழி, ஜீவிக்கு எளியதாக புரியும் என்று கூறியிருந்தார்.

    கடந்த வருடமே

    கடந்த வருடமே

    இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கடந்த வருடமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஆகவில்லை. இந்த மாதம் ரிலீஸ் ஆகும், அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கும் நிலையில் சில சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது பேஸ்புக்கில், உருக்கமானப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

    தலைகீழா நிக்கணும்

    அதில், ஒரு தயாரிப்பாளரைப் பிடிக்கிறதுக்கு தலைகீழா நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கணும். ஷூட்டிங் தடையின்றி நடக்க, கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கணும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம். ஆனா, இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Vasanathabalan pens a emotional post on hil film Jail release delay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X