சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விரைவில் வெளிவருவார்கள் - இயக்குநர் வஸந்த்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விரைவில் வெளிவருவார்கள்

By R VINOTH

சென்னை: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் விரைவில் வெள்ளித் திரையில் மின்னப்போகிறது என்று அந்த படத்தின் இயக்குநர் வஸந்த் கூறியுள்ளார். உலக திரைப்பட விழா முதல் சர்வதேச அளவில் நடைபெற்ற திரைப்பட விழா வரை அனைத்து விழாக்களிலும் பங்குபெற்று சிறந்த திரைப்படமாக தேர்வு பெற்றுள்ளது இந்த படம்.

இயக்குனர் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா, அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிஃபோர்னியா திரைப்படவிழாக்கள் சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளது.

Vasanth directed sivaranjiniyum innum sila pengalum

இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு உலக திரைப்பட விழாக்களில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்,

தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் ஃபுக்குவோக்கா (Fukuoka) உலக திரைப்பட விழாவிலும் யுரேசியாவில் நடைபெறும் மாபெரும் உலக திரைப்பட விழாவிலும் இயக்குனர் வஸந்த்.எஸ்.சாயின்(வஸந்த்) சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

உலக திரைப்பட விழாவில் கொண்டாடப்படும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை மையமாகக் கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த்.எஸ்.சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X