Nelson Dilipkumar - நெல்சனின் ஸ்டைல் தமிழ் சினிமாவுக்கு புதிது..மனம் திறந்த ஜெயிலர் நடிகர்

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ஸ்டைல் தமிழ் சினிமாவுக்கு புதிது என்று நடிகர் வசந்த் ரவி தெரிவித்திருக்கிறார்.

தர்பார், அண்ணாத்த என வரிசையாக இரண்டு படங்களை தோல்வி படங்களாக கொடுத்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 Vasanth Ravi Open Talks about Nelson Dilipkumar And Jailer Movie

கதை என்ன?: முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினி நடித்திருக்கிறார் என்றும்; அவருக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் வசந்த் ரவியை கடத்தும் கும்பலிடமிருந்து அவரை ரஜினிகாந்த் மீட்பதுதான் படத்தின் ஒன்லைன் என்றும் கூறப்படுகிறது. படத்தில் ஏகப்பட்ட மாஸ் காட்சிகள் இருந்தாலும் நெல்சன் திலீப்குமார் ஸ்டைலில் டார்க் காமெடியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாரை இறுக்கமாக அணைத்து தட்டிக்கொடுத்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டார். அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் நெல்சனை அப்படி தட்டிக்கொடுத்தது என கூறினர். எனவே படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும். இதன் மூலம் தான் மட்டுமே சூப்பர் ஸ்டார் என கோலிவுட்டு பலமாக ரஜினிகாந்த் நிரூபிப்பார் என்றும் ஆரூடம் சொல்ல தொடங்கியிருக்கின்றனர் ரசிகர்கள்.

வசந்த் ரவி பேட்டி: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படம் குறித்து பேசியிருக்கிறார்.அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஜெயிலர் படத்தில் நான் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ள காரணம் ரஜினிகாந்த்தான். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்காகவும் ஒத்துக்கொண்டேன். 70 வயதிலும் பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள் என அவர் எனக்கு அட்வைஸ் செய்தார்.

படம் ஏமாற்றாது: ஜெயிலர் படம் பற்றி நிச்சயம் ஒரு விஷயம் சொல்ல முடியும். அது உங்களை கண்டிப்பாக ஏமாற்றாது. நெல்சன் திலீப்குமாரிடம் ரியலிஸ்டிக் மீட்டரை கமர்ஷியலான டெம்ப்ளேட்டில் சொல்லும் திறமை இருக்கிறது. டார்க் காமெடியை டெட்பான் முக பாவனையோடு சொல்லும் நெல்சனின் ஸ்டைல் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கிறது" என கூறி படத்தின் மீதான ஹைப்பை ஏற்றியிருக்கிறார்.

ட்ரெய்லர் எப்போது: இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஆடியோ மட்டுமே வெளியானது. இந்தச் சூழலில் ஜெயிலரின் ட்ரெய்லர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகலாம் என நேற்றிலிருந்து ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் ட்ரெய்லருக்கு தங்களது காத்திருப்பதை ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X