முதல் வாய்ப்பு தந்த இயக்குநர் படத்தில் நடிக்கவிருக்கும் இசையமைப்பாளர்!

By Vignesh Selvaraj

Recommended Video

No.1 ஹீரோ ஜிவி பிரகாஷ்!

சென்னை : ஜி.வி.பிரகாஷ் கையில் அரை டஜன் படங்களுக்கும் மேல் இருக்கின்றன. 'செம', 'சர்வம் தாளமயம்', '100% காதல்', 'குப்பத்து ராஜா', 'அடங்காதே', 'ஐங்கரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பி.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷை 'வெயில்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த பாலன். 'வெயில்' படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டாக தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து வளர்ந்தார் ஜி.வி.பிரகாஷ்.

Vasantha balan to direct GV prakash

சில படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய நிலையில் 'டார்லிங்' படத்தில் தொடங்கி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தேதியில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகராக விளங்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ், அடுத்து தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 'போக்கிரி ராஜா' படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராமை, ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் வசந்த பாலன். நந்தன் ராம் 'பள்ளிப் பருவத்திலே' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X