நா. முத்துக்குமாருக்கு புகழஞ்சலி.. அது ஒரு அற்புதம்.. நெகிழ்ந்துபோன வசந்தபாலன்
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரை கௌரவிக்கும் விதமாக நேற்று 'ஆனந்த யாழை' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ஷங்கர், பாக்யராஜ், மாரி செல்வராஜ், பாலா என பலர் கலந்துகொண்டார்கள். மேலும் யுவன், ஜிவி பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, சித்தார்த், நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்டோர் முத்துக்குமார் எழுதிய பாடல்களை மேடையில் பாடினார்கள். இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் உடல்நல குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார். கரியரில் அவர் பீக்கில் இருந்தபோது அவர் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏகப்பட்ட பேர் அவரது மறைவை நினைத்து வருந்தினார்கள். அதுமட்டுமின்றி இன்றுவரை அவர் போல் எளிமையாக பாடல்கள் எழுதுவதற்கு யாருமே இல்லை என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறத்.
ஆனந்த யாழை: சூழல் இப்படி இருக்க அவரது 50ஆவது பிறந்தநாள் கடந்த 12ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனையொட்டியும், முத்துக்குமாரை கௌரவிக்கும் விதமாகவும் நேற்று சென்னையில் ஆனந்த யாழை என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு முத்துக்குமாரையும் அவரது குடும்பத்தையும் கௌரவித்தார்கள். மேடையில் பேசியவர்கள் எமோஷனலாக முத்துவை பற்றிய தங்களது மெமரிஸையும்,அவரை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தினார்கள். மொத்தம் 5,000 ரசிகர்கள்வரை அந்த இசை நிகழ்ச்சியை நேரில் வந்து பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தபாலன் பதிவு: இந்நிலையில் இயக்குநரும், நா. முத்துக்குமாரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில், "ஆகச்சிறந்த கலைஞன் மறைந்தாலும், அவனின் கலையும், கலையுலகமும், கலை ரசிகர்களும் அவனை கை விடுவதில்லை என்பதற்கு நா.முத்துக்குமாருக்கு நேற்று நடந்த புகழாஞ்சலி விழா ஒரு வரை. ஒவ்வொரு ரசிகனும் நா.முவின் பாடல் வரிகளை தங்கள் ஆன்மாவின் குரலாக பார்க்கிறார்கள்.பாடகர்கள் பாட பாட ரசிகர்களும் பாடகர்களோடு சேர்ந்து பாடியதைக் காண நா.மு மண்ணில் இறங்கி வர வேண்டும். ஆனந்த யாழை மீட்டவேண்டும்.
அற்புத எண்ணம்: நா. முத்துக்குமாருக்கு புகழாஞ்சலி நிகழ்வு செய்ய வேண்டும் என்கிற அற்புத எண்ணம் இயக்குநர் ஏஎல்விஜய் மனதில் மின்ன , அதற்கு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் உருவம் கொடுக்கிறார். இயக்குநர் ஆர்கே செல்வமணி அவர்கள், இயக்குநர் ஆர்வி உதயக்குமார் அவர்கள், இயக்குநர் ராம், இயக்குநர் என்.லிங்குசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ஜெயம் ராஜா,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி,எழுத்தாளர் அஜயன் பாலா, வேல்முருகன்,சரண்,ஹேமந்த் என பெரிய படை கைகோர்த்து
உலகிற்கு நிகழ்த்தி காட்டிவிட்டது: நட்புன்னா என்ன.. கலையுலகம்ன்னா என்னன்னு தெரியுமா என்கிற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிவிட்டது. நிகழ்வை அழகாக்கிய அற்புதம் நிகழ்த்திய உங்கள் அனைவரையும் நெஞ்சார வணங்குகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











