Vadivelu - வடிவேலு சிங்கம் போல் இருக்கிறார்.. மாமன்னனை பாராட்டிய வசந்தபாலன்

சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்தை பாராட்டி இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி பெரும் பாராட்டை பெற்றுவருகிறது. வடிவேலு, ஃபகத் ஆகியோரின் நடிப்பு, மாரி செல்வராஜின் இயக்கம், வசனம் ஆகியவை அட்டகாசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர்.

Vasantha Balan Praises Maamannan Movie

வசந்தபாலன் பதிவு: இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் மாமன்னன் படத்தை பாராட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாமன்னன் தமிழில் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார்.மனமார்ந்த வாழ்த்துகள்.

வடிவேலுவுக்கு மடைமாற்றம்: வடிவேலு அவர்களுக்கு நடிகனாக ஒரு பெரிய மடைமாற்றம்.அவரே நம்பாத ஒரு மாற்று பாதை.அந்த பாதையில் சிங்கமாக நடந்து செல்கிறார்.காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை,அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிப்படுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்.

மதயானை ஃபகத் பாசில்: பகத் பாசில் ஒடிசலான தேகத்துடன் மதயானை போன்ற தன் ஆளுமையால் கதாபாத்திரத்தை ஆள்கிறார். மாரியின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கல்லூரியில் பரியும் பரியின் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம். அதுபோல இந்த திரைப்படத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி,

உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் பொது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள் நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும் வாழ்த்துகள் மாரி செல்வராஜ் யாருக்காகவும் தன் தனித்துவமான பாதையை விட்டுத் தராத வைராக்கியத்திற்கு பிடிவாதத்திற்கு" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X