twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிராமங்களில்தான் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன! - வசந்த பாலன்

    By Shankar
    |

    கிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் உலகத் தரத்துக்கு படங்கள் அமையும் என்றார் இயக்குநர் வசந்தபாலன்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் நிழல் திரைப்பட சங்கம் சார்பில், கம்பம் அமராவதி தியேட்டரில் உலகத் திரைப்பட விழா கடந்த 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன.

    Vasantha Balan urges filmmakers to go villages for good stories

    விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    விழாவின் 2 ஆவது நாளான சனிக்கிழமை இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான மெஹர் திரைப்படம், போலந்து நாட்டைச் சேர்ந்த கேமரா பப், மலையாளப் படமான ஆதாமிண்ட மகன் அபு, அமெரிக்கப் படமான சாப்ளின் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

    பின்னர் இரவு நடந்த விழாவில், இச்சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ். கருணா தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ. மல்லூரி, வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சிறப்பு விருந்தினராக இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ஆர் ரவிக்குமார், ரெட்டை சுழி படத்தை இயக்கிய தாமிரா, அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இயக்குநர் தாமிரா பேசுகையில், தேனியில் தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. மெஹர் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இஸ்லாமிய சமுதாயப் பெண் தனது மகளின் திருமணத்துக்காக படும் கஷ்டமே இப்படத்தின் மையக் கரு. இப்படத்தை பார்த்த பல இளைஞர்கள், வரதட்சணை வாங்கமாட்டேன் எனக் கூறும்போது, படம் வெற்றி பெற்றதாகக் கருதுகிறேன் என்றார்.

    இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், "எந்த ஒரு சினிமா, ரசிகனை தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உலக சினிமா. உலகத்தில் தோல்வி அடைந்தவனைப் பற்றி சிறுகதை, நாவல், திரைப்படம் இல்லை. வெயில் படத்தில் தோல்வி அடைந்தவனைப் பற்றி எடுத்தேன், வெற்றி அடைந்தேன். அடித்தட்டு மக்களின் துன்பம், வலி, அவர்களின் அரசியல் குறித்தே எனது படம் இருக்கும். சென்னையில் பார்த்த உலக திரைப்படங்களே வெயில், அங்காடித் தெரு போன்ற படங்களை எடுக்கக் காரணமாக இருந்தது.

    சென்னையில் இருந்தால் இரண்டு வகையான கதைகள்தான் கிடைக்கும். ஆனால், கிராமங்களில்தான் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதை அப்படியே படமாக்கினால், பல உலகப் படங்கள் கிடைக்கும்," என்றார்.

    English summary
    Director Vasantha Balan says that there are lot of good stories available in villages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X