குறுகிய காலத்தில் அடுத்த படத்தையும் இயக்கி முடித்த இயக்குனர் வசந்த பாலன்

சென்னை: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடாத படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார்.

Recommended Video

Arjun Das Vasanthan Balan Movie is Wrap | Jail, G.V.Prakash,

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார், வசந்த பாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

2 படங்கள் காத்திருப்பில்

2 படங்கள் காத்திருப்பில்

இயக்குனர் வசந்த பாலன் தனது 20 வருட சினிமா வாழ்க்கையில் 5 படங்களை இயக்கியுள்ளார். அதில் "வெயில்" படத்திற்கு தேசிய விருதை பெற்றார். தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் "ஜெயில்" படத்தையும் இயக்கி முடித்துள்ளார். காத்திருப்பில் இரண்டு படங்கள் உள்ளன.

இறுதிக்கட்ட பணிகள்

இறுதிக்கட்ட பணிகள்

ஜெயில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்ட தட்ட அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். அதனை முடித்த உடன் குறுகிய காலத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன் ஆகியோரை வைத்து அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கைதி, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். துஷாரா பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்திலும் நடித்து முடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விரைவில் தலைப்பு

விரைவில் தலைப்பு

லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் கூடிய விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X