நான் தோற்றுவிட்டேன்.. வெற்றிமாறன் ஜெயித்து விட்டார்.. வசந்தபாலன் வாழ்த்து!

சென்னை : வெக்கை நாவலை படமாக்கும் முயற்சியில் நான் தோற்று விட்டேன் என்று வசந்தபாலன் கூறினார்.

இயக்குனர் வசந்தபாலன் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் கடைசியாக இயக்கிய காவியதலைவன் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தது அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கடின முயற்சிக்கு பிறகு தற்போது இவர் ஜெயில் படத்தை இயக்கி வருகிறார்.

Vasanthabalan congratulats vetrimaran for asuran movie hit

பிப்ரவரி 13 மாபெரும் இயக்குனரான பாலு மஹேந்திரா மறைந்த தினம். இதனால் பாலு மஹேந்திரா பெயரில் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த நாளில திறக்கப்பட்டது. இதில் பல பிரபலங்கள் பேசி தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் தமிழ் சார்ந்த படங்கள் தமிழ் சினிமாவில் வருவதே இல்லை எல்லாப்படங்களும் வெளிநாட்டு படங்களின் சாயலாக தான் இருக்கிறது. இது வருத்தத்திற்குரிய விசயம் நாளைய இயக்குனர்களான உதவி இயக்குனர்களும் குறும்பட இயக்குனர்களும் இதனால் பாதிப்படைகின்றனர் என கூறினார் .

Vasanthabalan congratulats vetrimaran for asuran movie hit

மேலும் தான் வெக்கை நாவலை படமாக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்ததாகவும் ஆனால் நான் உட்பட பலரால் அதை செய்ய முடியவில்லை. சாதிக்க முடியாத ஒன்றை வெற்றி, சாதித்து விட்டார் என வாழ்த்து கூறினார் வசந்தபாலன் .

மேலும் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்குகிறார் அதில் வாய்ப்பு கிடைத்தால் நான் உதவி இயக்குனராக சேர்ந்து விடுவேன் அந்த அளவுக்கு எனக்கு வெற்றி எப்படி நாவலை திரைக்கதையாக்கி படமாக்குகிறார் என்ற விதத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என கூறினார். மேலும் பாலு மஹேந்திராவின் உதவி இயக்குனர் என்பதால் கூட வெற்றிக்கு இப்படி ஒரு திறமை இருக்கலாம் என குறிப்பிட்டு கூறினார்.

Vasanthabalan congratulats vetrimaran for asuran movie hit

வசந்தபாலன் தற்போது திரைக்கதை வகுப்புகள் நடத்தப்படுவதை குறித்து தனது கருத்தை பகிர்ந்து உள்ளார். ஒரு நாள் அல்லது இரு நாள் திரைக்கதை வகுப்புகள் நடக்கிறது அதற்கு 5000 வரை வசூல் செய்யபடுகிறது சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் ஒரு உதவி இயக்குனரால் அவ்வளவு பணத்தை எப்படி கொடுக்க முடியும் என வேதனை தெரிவித்தார். இதனால் திரைக்கதை வகுப்புகளுக்கு சற்று கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தினார்.

வசந்தபாலன் வெயில் ,அங்காடி தெரு மற்றும் அரவான் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் .இவர் காவியதலைவன் படத்தில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு கொஞ்சம் கெஞ்சமாக மீண்டு வருகிறார் .பாகுபலி வந்த சமயத்தில் அவரது பிள்ளைகள் ஏன்பா நீ எப்போ அப்படி படம் எடுக்க போற என்று கேட்டத்தை மிக வருத்ததுடன் தனது கூகுள் பிளாக்கில் பகிர்ந்து இருந்தார் அது அப்போது சமூக வலைத்தளங்களில் பெரிதாக பகிரப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X