twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக விலகல்.. ஒரே நாள்ல இப்படி கேள்விக்குரியதா மாத்திட்டாங்களே..? இயக்குனர் வசந்தபாலன் வருத்தம்!

    By
    |

    சென்னை: இத்தனை நாள் கடைப்பிடித்த சமூக விலகல் ஒரே நாளில் கேள்விக்குரியதாக மாறியது வருத்தம் தருகிறது' என்று இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

    Recommended Video

    காற்றில் பறந்த சமூக இடைவெளி... அத்தியாவசிய பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

    கொரொனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (26) முதல் 29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திடீரென கூடிய மக்கள் கூட்டம்.. 4 நாளைக்கும் பிரியாணி சமைக்க போறாங்களா? வெங்கட்பிரபு கிண்டல்!திடீரென கூடிய மக்கள் கூட்டம்.. 4 நாளைக்கும் பிரியாணி சமைக்க போறாங்களா? வெங்கட்பிரபு கிண்டல்!

    வசந்தபாலன்

    வசந்தபாலன்

    சேலம், திருப்பூரில் வரும் 28-ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால், அதிர்ச்சி அடைந்த மக்கள், சென்னையில் இன்று காலை முதலே கடைகளில் கூடிவிட்டனர். சமூக விலகல் பற்றி கவலைப்படாமல் பொருட்களை வாங்க முண்டியடித்தனர். இதனால், இத்தனை நாள் கடைபிடித்த சமூக விலகல் கேள்விகுறியாகிவிட்டது என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

    நிறைந்து வழிந்தன

    நிறைந்து வழிந்தன

    இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்ற அரசின் திடீர் அறிவிப்பு நேற்றிரவு முதல் பெரும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது. காலை, சென்னை கே.கே நகரில் உள்ள அனைத்து சிறு பெரு மளிகை கடைகளும் காய்கறி கடைகளும் நிறைந்து வழிந்தன.

    மக்களிடம் பதட்டம்

    மக்களிடம் பதட்டம்

    போக்குவரத்து நெரிசல் ஏறபட்டுவிட்டது. கொரோனோ நம்மை தாக்கிவிடும் என்கிற பயத்தை மறந்து இந்த நான்கு நாட்கள் நமக்கு உணவு எதுவும் கிடைக்காமல் போய்விடப்போகிறது என்கிற பதட்டமே மக்களிடம் மேலோங்கி இருப்பதைக் கண்டேன். காலை 830 மணிக்கு சிறிய காய்கறிக்கடை ஒன்றில் வரிசையில் நின்றேன். ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்தது.

    வருத்தம் தருகிறது

    வருத்தம் தருகிறது

    கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றேன். மக்கள் வாங்கிக் குவித்தார்கள். மிஞ்சிய காய்களை வாங்கி விட்டு வீடடைந்தேன். இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூக விலகல் மற்றும் ஒழுங்கு இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்பதுதான் வருத்தம் தருகிறது' என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Director vasanthabalan says,the social distancing that practiced all day has been questioned today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X