இரண்டுமே சொன்னபடி ரிலீஸாகுமா..? ஷங்கரின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் பிரபல இயக்குநர்...?

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து டைரக்டரானவர் வசந்தபாலன்.

ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு, காவியத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பரத் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

 யதார்த்த இயக்குநர் வசந்தபாலன்

யதார்த்த இயக்குநர் வசந்தபாலன்

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் வசந்தபாலன். ஆல்பம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவருக்கு வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. யதார்த்த இயக்குநர் என மக்களால் கொண்டாடப்படும் வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக ஜெயில் திரைப்படம் வெளியானது. ஜிவி பிரகாஷ் நடித்திருந்த இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது.

 அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி

அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி

அதனைத் தொடர்ந்து தற்போது அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அநீதி படத்தின் முதல் பாடலும் டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே இந்தப் படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடும் என சில வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு வந்தது. அநீதி படத்தை வசந்தபாலனே தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அநீதி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

 புதிய வெப் சீரிஸ்

புதிய வெப் சீரிஸ்

அநீதி படத்தின் ஷூட்டிங் முடிந்ததோடு, அதன் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளும் வேகமாக நடைபெற்றன. இதனையடுத்து உடனடியாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க தொடங்கினார் வசந்தபாலன். பரத் நடிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ்க்கு தலைமைச் செயலகம் என்றும் டைட்டில் உறுதியானது. ஜீ5 ஓடிடி தளத்துக்காக இந்த வெப் சீரிஸ்ஸை வசந்தபாலன் இயக்கிவருகிறார், இந்நிலையில், அநீதி திரைப்படமும், தலைமைச் செயலகம் வெப் சீரிஸும் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 உண்மை நிலவரம் என்ன?

உண்மை நிலவரம் என்ன?

அநீதி படத்தை ஷங்கரே வெளியிடுவதாக அறிவித்துவிட்டார். ஆனாலும் பைனான்ஸ் பிரச்சினை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வெப் சீரிஸ் ஷூட்டிங்கும் திட்டமிட்டபடி நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜெயில் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதனால் தான் அநீதி படத்தை வியாபரம் செய்ய முடியாமல் வசந்தபாலன் திணறியதாகவும், உடனடியாக ஷங்கர் அவருக்கு கை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்காத சில காட்சிகளை வசந்தபாலன் இயக்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பை முடிப்பதில் ஷங்கரும் வசந்தபாலனும் பிஸியாக இருப்பதால் தான் அநீதி ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் இல்லையென்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X