குடும்ப பிரச்சனையில் நாகரீகம்.. இந்த வயதில் இப்படி ஒரு பண்பா.. ஜிவியை பார்த்து வியந்தேன்.. இயக்குநர்!
சென்னை: ஜி.வி.பிரகாஷ், கதாநாயகி தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் பிளாக் மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரே ஒரு பாடலுக்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆர்.வி.உதயகுமார், வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில், பேசிய வசந்த பாலன், பிளாக் மெயில் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தபோது, படத்தின் பெயரான பிளாக் மெயில் என்கின்ற வார்த்தை என்னை கவர்ந்தது. இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான் அது ஒரு மெயில் இல்லை என்பது தெரிந்தது. 16 சென்சுரி இங்கிலாந்து மற்றும் ஸ்டார்ட் லேண்ட் இடையே ஒரு பிரச்சனை நடந்த போது இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்களை கவரக்கூடிய படங்களை எடுக்க வேண்டும் என்றால், ஒன்று திரில்லர் அடுத்தது ஹாரர். அந்த மாதிரியான திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் வெற்றி பெறுகின்றனர்.இந்த படத்தின் டிரைலரே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது என்றார்.

ஜிவியின் பேரன்பு: தொடர்ந்து பேசிய வசந்த பாலன், ஜி.வி.பிரகாஷ் என்னிடம் வரும் போது சின்ன பையனாகத்தான் இருந்தார். 17 வயதில் பார்த்த ஜி.வியின் வளர்ச்சியை இப்போது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஜிவி-யுடன் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று பெருமையாக நினைப்பேன். நான் ஜி.வி.யை வைத்து படம் எடுக்கவில்லை என்றாலும் வேறு யார் மூலமாவது ஜிவி இந்த இடத்தை நிச்சயம் அடைந்து இருப்பார். யாரையும் வெறுக்காத, யாரிடமும் கோபம் கொள்ளாத, யாரிடமும் மோசமாக நடந்துக்கொள்ளாத, யாரையும் காயப்படுத்தாத ஒரு குணத்தை ஜி.வி யிடம் நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
இப்படி ஒரு பண்பா: சமீபத்தில் அவருடைய குடும்பப் பிரச்னையில் எவ்வளவு நாகரீகமாக நடந்துகொண்டார் என்பதை ஒரு வீடியோவில் பார்த்துவிட்டு. அவரை போனில் தொடர்புகொண்டு, உங்களின் பண்பை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஜி.வி இந்த வயதில் இவ்வளவு நாகரீகமாக நடந்துகொள்கிறாய் என்று சொன்னேன். தயாரிப்பாளர் ஜிவி விட்டு கொடுத்தார் என்று சொன்னார். அதே போல நடிகராக, இசையமைப்பாளராக பல திரைப்படத்திற்கு விட்டு கொடுத்து இருக்கிறார். என்னுடைய இரண்டு படத்திற்கும் ஜிவி விட்டு கொடுத்து இருக்கிறார். அவர் மட்டும் அன்று விட்டு கொடுக்கவில்லை என்றால், அந்த படங்கள் வெளியாகி இருக்காது. இந்த மாதிரியான ஒரு நபர் இன்டஸ்ட்ரியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பேரன்பிற்காக அவர் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பெரிய இடத்தைத் தொட வேண்டும். ஜி.விக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மாறன், ஜி.வி. இல்லை என்றால் இந்த படம் இல்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என கமல் பாணியில் சொல்லக் கூடியவர். பிளாக் மெயில் ஒரு கொரோனா போல் உலகம் முழுவதும் பரவி உள்ளது, அதனை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அந்த வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











