twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது தாங்க உண்மையான நட்பு.. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று வசந்தபாலனை சந்தித்த லிங்குசாமி!

    |

    சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனை உடன் போராடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பன் லிங்குசாமிக்கு எழுதியுள்ள நன்றி கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஷங்கருக்கு லைகா வைத்த அடுத்த 'செக்'... முற்றுகிறது இந்தியன் 2 விவகாரம் ஷங்கருக்கு லைகா வைத்த அடுத்த 'செக்'... முற்றுகிறது இந்தியன் 2 விவகாரம்

    வீரன் டா.. சாமிடா.. லிங்குசாமிடா.. நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய் என வசந்தபாலன் லிங்குசாமியை கொண்டாடி உள்ளார்.

    வசந்த பாலனுக்கு கொரோனா

    வசந்த பாலனுக்கு கொரோனா

    வெயில், அங்காடி தெரு, ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வசந்தபாலன். குதிரையை போல மீண்டும் எழுந்து வருவேன் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கை பதிவையும் போட்டு இருந்தார்.

    லிங்குசாமி நேரில் ஆறுதல்

    லிங்குசாமி நேரில் ஆறுதல்

    கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் வசந்தபாலனை அவரது உயிர் நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். லிங்குசாமியின் அந்த நட்பை பாராட்டும் விதமாக தற்போது கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட வசந்தபாலன் எழுதியுள்ள கவிதை வைரலாகி வருகிறது.

    வீரம் என்றால் என்ன?

    வீரம் என்றால் என்ன?

    வீரம் என்றால் என்ன? பயமில்லாத மாதிரி நடிக்கிறது. பழைய வசனம். வீரம் என்றால் என்ன தெரியுமா? பேரன்பின் மிகுதியில் நெருக்கடியான நேரத்தில் அன்பானவர்கள் பக்கம் நிற்பது புதிய வசனம் என மருத்துவமனையுடன் போராடி தன்னை பார்க்க வந்த வீரன் லிங்குசாமி என பாராட்டி உள்ளார்.

    இரவு மிருகமாய்

    இரவு மிருகமாய்

    போன வாரத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாததுமாய் அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது என தனக்காக தவித்த லிங்குசாமியை நினைத்து உருகி உள்ளார் வசந்தபாலன்.

    Recommended Video

    Director Vasanthan Balan மருத்துவமனையில் அனுமதி | Jail, Arjun Das | Filmibeat Tamil
    ஆண் பென்குயின்

    ஆண் பென்குயின்

    உங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்க, மருத்துவ நிர்வாகத்திடம் கொஞ்சம் நேரமாவது பார்த்து விட்டு செல்கிறேனே என கெஞ்ச முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. ஆண் பென்குயின் போன்று தோற்றமளிக்கிறது என்று வர்ணித்துள்ளார்.

    ஆயிரம் முத்தங்கள் லிங்கு

    நானிருக்கிறேன்.. நாங்களிருக்கிறோம் என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது. கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது. ஆயிரம் முத்தங்கள் லிங்கு.. ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய் என தனது நண்பனை கொண்டாடி தீர்த்துள்ளார் வசந்தபாலன்.

    English summary
    Angadi Theru director Vasanthabalan wrote a heartfelt note for Lingusamy, who wish him at Corona ward directly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X