»   »  வசந்தபாலனுக்கு கல்யாணம்!

வசந்தபாலனுக்கு கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

வெயில் இயக்குநர் வசந்த பாலனுக்கும், உறவுப் பெண்ணான விஜயலட்சுமிக்கும் விருதுநகரில் இன்று விமரிசையாக கல்யாணம் நடந்தேறியது.

விருதுநகரைச் சேர்ந்தவர் வசந்த பாலன். வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது வருகையை ஆணித்தரமாக பதித்தவர், ஷங்கரிடம்உதவியாளராக இருந்தவர்.

திறமை மிகுந்த இந்த இளம் இயக்குநருக்கும் விஜயலட்சுமி என்ற அழகு நங்கைக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. உறவுப் பெண்ணானவிஜயலட்சுமியைத்தான் வசந்த பாலன் மணந்தார். விருதுநகரில் உள்ள அம்பாள் ராமசாமி கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு திருமணம்விமரிசையாக நடந்தேறியது.

சங்கரால் பட்டை தீட்டப்பட்ட வசந்த பாலன், கவிதாலயாவுக்காக ஆல்பம் என்ற படத்தை இயக்கிக் கொடுத்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது.வசந்த பாலனும் கவனிக்கப்படவில்லை.

ஆனால் தனது மனதை இழக்காத வசந்தபாலன், பல கதைகளை ரெடி செய்து ஷங்கரிடம் போய்க் காட்டினார். அதில் ஷங்கர் செலக்ட் செய்தகதைதான் வெயில். அவரே தயாரித்தார். படம் சூப்பர் ஹிட். இப்போது வசந்தபாலனும் ஒரு பிசியான, முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார்.

வெயிலைக் கொடுத்த வசந்த பாலன் பத்து மாதத்தில் விஜயலட்சுமி மூலம் நிலாவைக் கொடுக்க வாழ்த்துவோம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil