விஜய்யின் ஹேர் ஸ்டைல்.. சர்வதேச அளவில் பிரபலமானவர்தான் காரணம்

சென்னை: விஜய்க்கு வடிவமைக்கப்பட்டிருந்த ஹேர் ஸ்டைலுக்கு சர்வதேச அளவில் பிரபலமானவர்தான் காரணமாம்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். படம் அக்டோபர் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

ஆரம்பக்கட்ட விஜய்

ஆரம்பக்கட்ட விஜய்

விஜய் இப்போது பக்கா கமர்ஷியல் ஹீரோ. அவரை நம்பி கோடி கோடியாக பணத்தை கொட்டினால் அதனை நிச்சயம் மீண்டும் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஆரம்பகாலக்கட்ட விஜய் இப்படி இல்லை. இயக்குநரின் மகன் என்ற அடையாளம் இருந்தால் போதுமா? இவரெல்லாம் ஹீரோவா என ஏகப்பட்ட விமர்சனங்களையும், தாக்குதல்களையும் சந்தித்தவர் விஜய். ஆனால் அதையெல்லாம் தனது காதிலேயே ஏற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து பயணப்பட்டார்.

முதல் ஹிட்டான பூவே உனக்காக

முதல் ஹிட்டான பூவே உனக்காக

எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை வைத்து அவரது ஆரம்பகாலத்தில் பல படங்கள் இயக்கியிருந்தாலும் ஒரு படம்கூட இருவரும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் கமிட்டானார். அந்தப் படத்திலிருந்து தனது ஹிட் கணக்கை தொடங்கிய விஜய் பல படங்களை ப்ளாக் பஸ்டராக கொடுத்திருக்கிறார்.

விஜய்யின் கேரியர் பெஸ்ட்

விஜய்யின் கேரியர் பெஸ்ட்

விஜய்யின் கேரியர் பெஸ்ட்டாக துள்ளாத மனமும் துள்ளும், குஷி, காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, கில்லி, போக்கிரி என பல படங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான இரண்டு படங்கள் நினைத்தேன் வந்தாய் மற்றும் ப்ரியமானவளே படங்களாகும். அந்தப் படங்கள் விஜய்க்கென்று பெண் ரசிகைகளையும், குடும்ப ரசிகர்களையும் உருவாக்கின. அந்தப் படங்களை இயக்கியவர் செல்வபாரதி.

விஜய்யை வைத்து வசீகராவை உருவாக்கிய செல்வபாரதி

விஜய்யை வைத்து வசீகராவை உருவாக்கிய செல்வபாரதி

முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கதை, வசனம் எழுதிய செல்வபாரதி நினைத்தேன் வந்தாய் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே படங்களை செய்துவிட்டு கடந்த 2003ஆம் ஆண்டு வசீகரா என்ற படத்தை இயக்கினார். தெலுங்கு படமான நுவ்வு நாக்கு நச்சாவின் ரீமேக்காக உருவான இப்படத்தில் ஸ்னேகா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் தோல்வி அடைந்தது.

விஜய்யின் ஹேர் ஸ்டைல்

விஜய்யின் ஹேர் ஸ்டைல்

படம் தோல்வி அடைந்தாலும் அதில் விஜய்யின் நடிப்பும், உடல்மொழியும் வெகுவாகவே ரசிக்கப்பட்டது. அதிலும் அந்தப் படத்தில் விஜய் பயன்படுத்தியிருந்த ஹேர் ஸ்டைல் புதிதாக இருந்தது. இன்றுவரை அவர் பல ஹேர் ஸ்டைல்களில் அவர் திரையில் தோன்றினாலும் வசீகரா ஹேர் ஸ்டைல் விஜய் ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே கவர்ந்தது. தற்போது அந்த ஹேர் ஸ்டைல் குறித்த ரகசியம் தெரியவந்துள்ளது.

ஹேர் ஸ்டைலுக்கு சச்சின்தான் காரணம்

ஹேர் ஸ்டைலுக்கு சச்சின்தான் காரணம்

அதாவது வசீரா படத்துக்கு விஜய்க்கு என்ன ஹேர் ஸ்டைல் வைக்கலாம் என்று இயக்குநர் செல்வபாரதி தீவிர சிந்தனையில் இருந்திருக்கிறார். ஆனால் இதுவரை யாரும் காண்பிக்காத ஹேர் ஸ்டைலில் விஜய்யை காண்பிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவும் இருந்திருக்கிறார். அந்தசமயத்தில் இந்திய கிரிக்கெட் வீரரும், சர்வதேச அளவில் பிரபலமானவருமான சச்சின் டெண்டுல்கர் மொட்டை அடித்த பிறகு கொஞ்ச காலத்தில் முடி வளர்ந்தால் எப்படி இருக்குமோ அந்த ஹேர் ஸ்டைலை ஒரு ஃபோட்டோவில் பார்த்திருக்கிறார். நேராக விஜய்யிடம் சென்று அந்த ஃபோட்டோவை காட்டியிருக்கிறார்.

முதலில் மறுத்து பிறகு ரசித்த விஜய்

முதலில் மறுத்து பிறகு ரசித்த விஜய்

அதைப் பார்த்த விஜய் நல்லா இருக்கே என கூற; இந்த ஹேர் ஸ்டைலைதான் உங்களுக்கு படத்தில் யூஸ் பண்ணப்போகிறோம் என கூறினாரா. அதற்கு உடனடியாக மறுத்த விஜய் என்ன விளையாடுறீங்களா மொட்டைலாம் அடிக்க சொல்றீங்க என சொன்னாராம். ஆனால் விடாப்பிடியாக இருந்த இயக்குநரின் பேச்சை மீற முடியாமல் அந்த ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டாராம். அந்த சமயத்தில் இயக்குநரை அழைத்த விஜய், உண்மைலே இந்த ஹேர் ஸ்டைல் நல்லாத்தான் இருக்கு அண்ணா என கூறினாராம். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் செல்வபாரதி பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X