கமல் ஹாசனின் வசூல் ராஜாவில் நடித்த சாம்பு மவன் நியாபகம் இருக்கா?.. விபத்தில் உயிரிழப்பு?

சென்னை: கமல் ஹாசன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் பிஸியாக இருக்கும் அவர் கடைசியா்அமரன் படத்தை தயாரித்தார். இந்தச் சூழலில் கமல் ஹாசன் நடித்த வசூல் ராஜா படத்தில் சாம்பு மவன் என்கிற கேரக்டரில் நடித்த நடிகர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்த அவரது நடிப்பு பயணம் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது. சினிமாவில் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதோவொரு புதிய முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பவர். அது வெற்றி பெறுகிறதோ இல்லை தோல்வியடைகிறதோ தனது சோதனை முயற்சியை மட்டும் அவர் எப்போதும் கைவிட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கமல்: தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்த அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் காரணமாக நடிப்புக்கு சில காலம் முழுக்கு போட்டிருந்தார். ஆனால் அரசியல் களத்தில் கமல் ஹாசன் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. எனவே அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட்டாகிவருகிறார் அவர்.

தக் லைஃப்: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். படம் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பானது. அதற்கு பதிலாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

Vasool Raja MBBS Movie Actor Rathna Sababathy Was Dead

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்: கமல் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் வசூல் ராஜா எம்பிபிஎஸ். சரண் இயக்கியிருந்த அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். மேலும் நாகேஷ், பிரகாஷ் ராஜ், கருணாஸ், பிரபு உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ஹிந்தி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றிதான் படத்தை உருவாக்கியிருந்தார்கள். படமோ மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

சாம்பு மவன் உயிரிழப்பு: படத்தில் அமைந்திருந்த ஏகப்பட்ட ஹைலைட் விஷயங்களில் ஒரு விஷயம்தான் சாம்பு மவன் கேரக்டர். படம் முழுவதும் What is The procedure to Change a Room என்று பேசியே ஃபேமஸ் ஆனவர்தான் அந்த கேரக்டரில் நடித்தவர். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இணையதளம் ஒன்றில் ஒரு ரசிகர் அந்த கேரக்டரை ஏற்றிருந்த நடிகரின் பெயர் என்னவென்று கேட்டார். அதற்கு இன்னொருவரோ, 'அந்த நடிகர் எனது சகோதரரின் கிளாஸ் மெட். பெயர் ரத்தின சபாபதி. சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X