»   »  நயன்தாரா த பெஸ்ட்... அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த ஆசை! - வாசு பக்னானி

நயன்தாரா த பெஸ்ட்... அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த ஆசை! - வாசு பக்னானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான வாசு பக்னானி, முதல் முறையாக தனது பூஜா என்டர்டெயின்மெண்ட் பேனரில் தமிழில் படம் தயாரிக்கிறார்.

கொலையுதிர் காலம் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.


Vasu Bagnani wants to introduce Nayan in Bollywood

கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் மற்றும் அஜீத் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.


இந்தியில் வெளியான 'கூலி நம்பர் 1' திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த 'பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு இந்த கொலையுதிர் காலம் 31 வது படம்.


Vasu Bagnani wants to introduce Nayan in Bollywood

தயாரிப்பாளர் வாசு பக்னானி பேசுகையில், "சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம்தான். அந்தப் படத்தைத்தான் ஹிந்தியில் நான் 'கூலி நம்பர் 1' என்ற தலைப்பில் ரீமேக் செய்தேன். அதனை தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்த எங்கள் நிறுவனம், தற்போது முதல் முறையாக கொலையுதிர் காலம் படம் மூலம் நேரடியாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.


Vasu Bagnani wants to introduce Nayan in Bollywood

நான் பார்த்த சிறந்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரை ஹிந்தி பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. அவ்வளவு திறமையானவர் அவர். தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. இதே படம் ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிக்க தயாராகிறது," என்றார்.

English summary
Producer Vasu Bagnani is wants to introduce Nayanthara in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil