»   »  பி.வாசுவுக்கு பாராட்டு விழா 50 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பி.வாசுவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்தவரான வாசுவின் தந்தை எம்ஜிஆரிடம் (மலையாள கனெக்ஷன் மூலமாக) மேக்-அப்மேனாக இருந்தவர். இதையடுத்து வாசுவும் சினிமாவில் நுழைந்தார்.இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த வாசு, பன்னீர் புஷ்பங்கள் என்ற அருமையான திரைப்படம் மூலம் (இந்தப்படம்தான் நடிகர் சுரேஷுக்கும் முதல் படம்) இயக்குனராக உயர்ந்தார். பின்னர் சின்னதம்பி என்ற பாடாவதியான படம் (தாலிஎன்றாலே என்னவென்று தெரியாத ஒரு அம்மாஞ்சியின் காதல் கதை) மூலம் உச்சத்தை எட்டினார்.சமீபத்தில் அவர் இயக்கிய சந்திரமுகி, வாசுவுக்கு 50வது படமாகும். இந்தப் படம் இதுவரை ரூ. 80 கோடி வரை வசூல் செய்துபெரும் சாதனை படைத்ததுஇதையொட்டி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராதாரவி, நடிகைகுஷ்பு, கவிஞர் வாலி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.வாலி பேசுகையில், வாசுவின் தந்தை பீதாம்பரம் மிகச் சிறந்த மேக்கப்மேன். அவரது கை பட்டவர்கள் வேகமாக உயர்ந்துவிடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மேக்கப் போட்டார், அவர் முதல்வரானார். பின்னர் என்.டி.ராமாராவுக்குப் போட்டார், அவரும்முதல்வர் ஆனார். ஒரு நாள் ரஜினிக்கும் அவர் மேக்கப் போட வேண்டும்.வாசு, 50 படங்களை இயக்கியுள்ளார். நான் 50 வருடங்களாக பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசு படங்களில் மட்டும் 200பாடல்களை எழுதியுள்ளேன். மிகப் பெரிய இயக்குனராக இருக்க என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவை அத்தனையும்வாசுவிடம் உள்ளன என்றார் வாலி.கார்த்திக் பேசுகையில், இந்த பாராட்டு விழா போதாது. திரையுலகமே திரண்டு வந்து பெரிய அளவில் நடத்திக் கெளரவிக்கவேண்டும் என்றார்.சின்னதம்பி மூலம் தமிழில் உச்சாணிக் கொம்பில் ஏறிய நடிகை குஷ்பு பேசுகையில், நான் வாசுவுடன் அதிகமாக சண்டைபோடுவேன். ஆனால் அடுத்த நிமிடமே சமாதானமாகி விடுவோம். எனக்கு முதல் குருநாதர், என்னை அறிமுகப்படுத்திய எஸ்.பி.முத்துராமன் சார். இரண்டாவது குருநாதர் பி.வாசு என்றார்.

பி.வாசுவுக்கு பாராட்டு விழா 50 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பி.வாசுவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்தவரான வாசுவின் தந்தை எம்ஜிஆரிடம் (மலையாள கனெக்ஷன் மூலமாக) மேக்-அப்மேனாக இருந்தவர். இதையடுத்து வாசுவும் சினிமாவில் நுழைந்தார்.இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த வாசு, பன்னீர் புஷ்பங்கள் என்ற அருமையான திரைப்படம் மூலம் (இந்தப்படம்தான் நடிகர் சுரேஷுக்கும் முதல் படம்) இயக்குனராக உயர்ந்தார். பின்னர் சின்னதம்பி என்ற பாடாவதியான படம் (தாலிஎன்றாலே என்னவென்று தெரியாத ஒரு அம்மாஞ்சியின் காதல் கதை) மூலம் உச்சத்தை எட்டினார்.சமீபத்தில் அவர் இயக்கிய சந்திரமுகி, வாசுவுக்கு 50வது படமாகும். இந்தப் படம் இதுவரை ரூ. 80 கோடி வரை வசூல் செய்துபெரும் சாதனை படைத்ததுஇதையொட்டி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராதாரவி, நடிகைகுஷ்பு, கவிஞர் வாலி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.வாலி பேசுகையில், வாசுவின் தந்தை பீதாம்பரம் மிகச் சிறந்த மேக்கப்மேன். அவரது கை பட்டவர்கள் வேகமாக உயர்ந்துவிடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மேக்கப் போட்டார், அவர் முதல்வரானார். பின்னர் என்.டி.ராமாராவுக்குப் போட்டார், அவரும்முதல்வர் ஆனார். ஒரு நாள் ரஜினிக்கும் அவர் மேக்கப் போட வேண்டும்.வாசு, 50 படங்களை இயக்கியுள்ளார். நான் 50 வருடங்களாக பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசு படங்களில் மட்டும் 200பாடல்களை எழுதியுள்ளேன். மிகப் பெரிய இயக்குனராக இருக்க என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவை அத்தனையும்வாசுவிடம் உள்ளன என்றார் வாலி.கார்த்திக் பேசுகையில், இந்த பாராட்டு விழா போதாது. திரையுலகமே திரண்டு வந்து பெரிய அளவில் நடத்திக் கெளரவிக்கவேண்டும் என்றார்.சின்னதம்பி மூலம் தமிழில் உச்சாணிக் கொம்பில் ஏறிய நடிகை குஷ்பு பேசுகையில், நான் வாசுவுடன் அதிகமாக சண்டைபோடுவேன். ஆனால் அடுத்த நிமிடமே சமாதானமாகி விடுவோம். எனக்கு முதல் குருநாதர், என்னை அறிமுகப்படுத்திய எஸ்.பி.முத்துராமன் சார். இரண்டாவது குருநாதர் பி.வாசு என்றார்.

Subscribe to Oneindia Tamil

50 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பி.வாசுவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்தவரான வாசுவின் தந்தை எம்ஜிஆரிடம் (மலையாள கனெக்ஷன் மூலமாக) மேக்-அப்மேனாக இருந்தவர். இதையடுத்து வாசுவும் சினிமாவில் நுழைந்தார்.

இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த வாசு, பன்னீர் புஷ்பங்கள் என்ற அருமையான திரைப்படம் மூலம் (இந்தப்படம்தான் நடிகர் சுரேஷுக்கும் முதல் படம்) இயக்குனராக உயர்ந்தார். பின்னர் சின்னதம்பி என்ற பாடாவதியான படம் (தாலிஎன்றாலே என்னவென்று தெரியாத ஒரு அம்மாஞ்சியின் காதல் கதை) மூலம் உச்சத்தை எட்டினார்.

சமீபத்தில் அவர் இயக்கிய சந்திரமுகி, வாசுவுக்கு 50வது படமாகும். இந்தப் படம் இதுவரை ரூ. 80 கோடி வரை வசூல் செய்துபெரும் சாதனை படைத்தது

இதையொட்டி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராதாரவி, நடிகைகுஷ்பு, கவிஞர் வாலி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

வாலி பேசுகையில், வாசுவின் தந்தை பீதாம்பரம் மிகச் சிறந்த மேக்கப்மேன். அவரது கை பட்டவர்கள் வேகமாக உயர்ந்துவிடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மேக்கப் போட்டார், அவர் முதல்வரானார். பின்னர் என்.டி.ராமாராவுக்குப் போட்டார், அவரும்முதல்வர் ஆனார். ஒரு நாள் ரஜினிக்கும் அவர் மேக்கப் போட வேண்டும்.

வாசு, 50 படங்களை இயக்கியுள்ளார். நான் 50 வருடங்களாக பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசு படங்களில் மட்டும் 200பாடல்களை எழுதியுள்ளேன். மிகப் பெரிய இயக்குனராக இருக்க என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவை அத்தனையும்வாசுவிடம் உள்ளன என்றார் வாலி.

கார்த்திக் பேசுகையில், இந்த பாராட்டு விழா போதாது. திரையுலகமே திரண்டு வந்து பெரிய அளவில் நடத்திக் கெளரவிக்கவேண்டும் என்றார்.

சின்னதம்பி மூலம் தமிழில் உச்சாணிக் கொம்பில் ஏறிய நடிகை குஷ்பு பேசுகையில், நான் வாசுவுடன் அதிகமாக சண்டைபோடுவேன். ஆனால் அடுத்த நிமிடமே சமாதானமாகி விடுவோம். எனக்கு முதல் குருநாதர், என்னை அறிமுகப்படுத்திய எஸ்.பி.முத்துராமன் சார். இரண்டாவது குருநாதர் பி.வாசு என்றார்.


Read more about: director p vasu felicitated

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil