கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட விட மாட்டோம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் குமுறல்
Recommended Video

பெங்களூர்: ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் கன்னடர்களுக்கு எதிராக பேசி வரும் ரஜினியின் படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழை பொய்த்துப் போனதால் அணைகளில் போதிய அளவு நீர் இல்லை. கர்நாடக மக்களே குடிக்க நீர் இல்லாமல் அல்லாடுகிறார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்தோ தனது அரசியல் லாபத்திற்காக கன்னடர்களுக்கு எதிராக பேசியுள்ளார். கன்னடர்களுக்கு எதிராக பேசி வரும் ரஜினியின் படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் கன்னட அமைப்புகளை ஒன்று சேர்த்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் காலா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











