ஓடிடியில் வெளியாகும் ஆண்ட்ரியாவின் ‘வட்டம்‘..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
சென்னை : சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா, தற்போது பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதுவரை ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , வடசென்னை, அரண்மனை 1 மற்றும் அரண்மனை 3, மாஸ்டர், வடசென்னை உள்ளிட்ட படங்கள் வெளியாகி இவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தை கொடுத்தது.

ஆண்ட்ரியா
துணிச்சலான கதைப்பாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா, இப்படத்தில் ஆடையில்லாமல் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று மிஸ்கின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த 'பிசாசு 2' படத்திற்கு முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 31ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

திகில் கதை
சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் திகில் கதையம்சம் கொண்ட படமாகும். இப்படத்தில் சிபிராஜ் லீட் ரோலில் நடித்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளும் தான் திரைக்கதை.

ஓடிடியில்
ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வட்டம் திரைப்படத்தை கமலக்கண்ணன் இயக்கி உள்ளார். அதுல்யா ரவி, மஞ்சுமா மோகன், சமுத்திரக்கனி, நட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படம், ஜூலை 29ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிராஜ்
பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழக்கையை அதன் போக்கில் அந்த தருணத்தை அனுபவித்து வாழும் மனிதனாக நடித்துள்ளார் சிபிராஜ், இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாயோன் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது வெளியாக உள்ள வட்டம் திரைப்படம் சிபிராஜூக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











