திரைத் துளி

By Staff

திருட்டு வி.சி.டிக்களை ஒழிக்கக் கோரி கோட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்று முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் படப் பிடிப்புகளையே நிறுத்திவிடவும்திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் திருட்டு வி.சி.டிக்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இன்று வெளியான புத்தம் புதிய திரைப்படத்தின் திருட்டு வி.சி.டி. உடனடியாக வெளியாகிவிடுகிறது.

மறுநாளே அதன் ஆயிரக்கணக்கான பிரதிகள் தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும்விற்கப்படுகின்றன. அன்று இரவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அந்தப் படத்தை டி.விக்களில்திரையிட்டுவிடுகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் புதிய படங்களின் வி.சி.டிக்கள் திரும்பதமிழகத்திற்கே கொண்டு வரப்பட்டு ஆயிரக்கணக்கில் பிரதிகள் எடுக்கப்பட்டு நாடு முழுவதும்விற்கப்படுகின்றன.

இதனால் படங்கள் 15 நாட்கள் கூட ஓடுவது சிரமமாகி உள்ளது. சமீபத்தில் வெளியான ரமணாபோன்ற நல்ல படங்கள் கூட தோல்வியைத் தழுவி விட்டன. இதற்கு திருட்டு வி.சி.டியும் கேபிள்டிவியும் தான் காரணம்.

தொடர்ந்து பல படங்கள் தோற்று வருவதால் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், வாங்கிவிற்கும் வினியோகஸ்தர்கள், திரையிடும் தியேட்டர்கள் அதிபர்கள் என அனைத்துத் தரப்பினருமேகோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர்.

இதனால் படப் பிடிப்புகளை உடனே ரத்து செய்யுமாறும், தியேட்டர்களை மூடிவிடுமாறும் சமீபத்தில்நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த் அழைப்பு விடுத்தார்.

இந் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம்சென்னையில் நேற்று நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான முரளிதரன்இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

ஏவி.எம். சரவணன், பஞ்சு அருணாசலம், இப்ராகிம் ராவுத்தர், கே. ராஜன், எஸ்.ஏ. சந்திரசேகரன்,சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன் உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டஇந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவரான விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

மேலும் இயக்குநர்கள் செல்வமணி, வி. சேகர், டி.பி. கஜேந்திரன், ராஜகுமாரன், சரண், முருகதாஸ்,ஆர். செல்வராஜ் மற்றும் நடிகர்கள் எஸ்.வி. சேகர், ரமேஷ் கண்ணா ஆகியோரும் இக்கூட்டத்தில்கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், திருட்டு வி.சி.டிக்களை ஒழிப்பதற்காக போராட்டக் குழுவை அமைப்பதுஎன்றும் அதற்கு விஜயகாந்த் தலைமை வகிப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி போராட்டக் குழுவினர் ஊர்வலமாக தலைமைச் செயலகத்திற்குச் சென்றுஜெயலலிதாவிடம் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றைக் கொடுப்பார்கள் என்றும்கூறப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் இது தொடர்பாக நிருபர்களிடம் விஜயகாந்த் பேசுகையில்,

ஒரு படத்தை எடுப்பதற்கான பணத்தை செலவழிப்பது தயாரிப்பாளர். அதை வினியோகஸ்தர்கள்வெளியிடுகிறார்கள். இதற்கு இடையே எவன் எவனோ வந்து திருட்டு வி.சி.டிக்களை தயாரித்துவெளியிடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

திருட்டு வி.சி.டிக்களை ஒழிக்கக் கோரி தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர்-நடிகைகள்உள்ளிட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுக்க முடிவுசெய்துள்ளோம். இது தொடர்பாக வரும் 8ம் தேதி திரையுலகின் அனைத்து தரப்பினருடன்பேசுவோம் என்றார் விஜயகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X