பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய புகார்.. பிக் பாஸ் விக்ரமனுக்கு எதிராக விசாரணைக் குழுவை அமைத்த விசிக!

சென்னை: பிக் பாஸ் விக்ரமனுக்கு டைட்டில் கொடுக்க வேண்டும் என மக்களை வாக்களிக்க சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன் தற்போது விக்ரமனை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளாராம்.

அறம் வெல்லும் என பிக் பாஸ் வீட்டில் பல அரசியல் கருத்துக்களை பேசி அப்படியே அடுத்த ஆரி போல டைட்டிலை வெல்ல நினைத்த விக்ரமனுக்கு கடைசி நேரத்தில் அசீமுக்கு டைட்டில் கொடுத்து விஜய் டிவி சரியான பல்பு கொடுத்தது.

இந்நிலையில், பெண் வழக்கறிஞர் ஒருவர் கல்யாணம் செய்துக் கொள்வதாக தன்னுடன் பழகி தனது பணத்தை எல்லாம் ஏமாற்றி மோசடி செய்து விட்டார் விக்ரமன் என்றும் சாதிய ரீதியாகவும் அவமானப்படுத்தி விட்டார் என விசிகவிடமே புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

VCK forms internal committee to probe allegations against Bigg Boss Vikraman

சர்ச்சையான போட்டியாளர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலரும் ஏதாவது சர்ச்சையில் சிக்கியவர்களா? அவர்கள் மீது ஏதாவது கிரைம் ரேட் இருக்கிறதா? என தேடிப் பார்த்தே டிஆர்பிக்காக பிக் பாஸ் குழு அவர்களை போட்டியாளர்களாக மாற்றி வருவதாக கடும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசனும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்து விட்டால் அந்த போட்டியாளர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் மீரா மிதுன் போன்ற மோசடி பேர்வழிகளைத் தான் இந்த நிகழ்ச்சி உருவாக்கி வருகிறது என விளாசி வருகின்றனர்.

VCK forms internal committee to probe allegations against Bigg Boss Vikraman

விக்ரமனுக்காக வாக்கு கேட்ட திருமாவளவன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விசிக கட்சியை சேர்ந்த விக்ரமன் வெற்றிப் பெற வேண்டும் அவருக்கு ஓட்டுப் போடுங்க என கடைசி நேரத்தில் அந்த கட்சியின் தலைவரான திருமாவளவன் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகவே திருமாவளவன் ட்வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசி நேரத்தில் பிக் பாஸ் டைட்டில் அசீமுக்கு செல்லவும் அந்த ட்வீட் தான் காரணம் என சர்ச்சைகள் வெடித்தன.

பெண் வழக்கறிஞர் புகார்: இந்நிலையில், பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி ஏகப்பட்ட பணத்தை அபகரித்து விட்டார் என்றும் அவரிடம் இதுபற்றி நியாயம் கேட்க சென்றபோது தனது சாதியை வைத்து இழிவாக பேசி சித்ரவதை செய்தார் என விசிக தலைவர் திருமாவளவனிடமே புகார் அளித்துள்ளார்.

VCK forms internal committee to probe allegations against Bigg Boss Vikraman

5 பேர் கொண்ட விசாரணை குழு: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் விக்ரமனிடம் விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், அந்த கட்சியை சேராத 3 பெண் உறுப்பினர்களும் மேலும் 2 பேரும் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் விக்ரமனுக்கு எதிரான ஆதாரங்களையும் அந்த குழுவில் சமரிபித்து இருப்பதாகவும் இந்த விசாரணை முடிவில் விக்ரமனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் உறுதியாக உள்ள நிலையில், இதை அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் விக்ரமனை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.

சிலர், விசாரணை முடிவு வரட்டும் என இன்னமும் விக்ரமனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X