காற்று இவரிடம் ஒலியாய்த் தெறிக்கும்.. தேனாய் இனிக்கும்.. இளையராஜாவுக்கு திருமா பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா.

VCK president Thirumavalavan says birthday wishes to Ilayaraja

7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ள இளையராஜா, 20000 மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VCK president Thirumavalavan says birthday wishes to Ilayaraja

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன் இளையராஜாவுக்கு டிவிட்டரில் கவிதை மொழியில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது,

காற்றும் ஒலியும்
இவரது
கைவிரல்அசைவுகளின் கட்டுப்பாட்டில்

காற்றுஇவரிடம்
ஒலியாய்த்தெறிக்கும்
தேனாய்இனிக்கும்

பறையில்அதிரும்
குழலில் குழையும்
இழையில் இழையும்

இசையாய்ப் பெருகும்
இசைவாய் இசையும்

தமிழில் கரையும்
தமிழும் கரையும்

உயிராய் உருகும்
உயிர்களும் உருகும்..

இவ்வாறு திருமாவளவன், இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X