முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதியா !- இந்தா வந்துருச்சில்ல எதிர்ப்பு
சென்னை: கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கு.
விஜய் சேதுபதி மாதிரியான நல்ல நடிகர் ராஐபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனையை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கார்.
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய் சேதுபதிக்கு அவரது ரசிகர்கள் மக்கள் செல்வன்னு பட்டம் கொடுத்திருக்காங்க. விஜய் சேதுபதி ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தோன்றினாலும் பின்னர் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பினால் கதாநாயகனாக வலம்வரத் தொடங்கினார்.
அவ்வப்போது ஆரஞ்சு மிட்டாய், பண்ணையாரும் பத்மினியும் போன்ற கதையம்சம் உள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.
இதையடுத்து அவருடைய திரையுலக வளர்ச்சி டாப் கியரில் எகிறியது. அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தாலும், இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. இதனால் மீண்டும் தான் நடிக்கும் படத்தை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி என்றாலே சுவாரஸ்யமான கதை அல்லது கதாபாத்திரங்களைத்தான் தேர்வு செய்வார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. 96 படம் அவரது ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்வீட்டான படம். அதைத்தவிர சமீபத்தில அவரோட நடிப்பில ரிலீஸ் ஆன சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததால் அப்படங்கள் வெற்றியைத் தரவில்லை. இதனால இனிமே நடிக்கப்போற படங்களை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கப்போவதாக சொல்லியிருக்கார் விஜய் சேதுபதி.

முத்தையா முரளிதரன்
அடுத்தடுத்து பல புதிய தமிழ்படங்களில் நடிக்கப்போற விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனோட வாழ்க்கை வரலாறு படத்தில நடிக்கப்போறதா தகவல் வெளியாகியிருக்கு. இது அவருடைய ரசிகர்கள் கிட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு.

விஜய் சேதுபதிக்கு வாழ்த்து
தன்னுடைய கேரக்டர்ல விஜய் சேதுபதி நடிப்பதற்கு முத்தையா முரளிதரன் வாழ்த்தியிருக்கார். என்னோட வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு தமிழ்படம் தயாரிக்கப்படுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கு. என்னுடைய கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப்போறார். அவருடைய படங்களை நான் விரும்பி பார்ப்பேன். நல்ல நடிகராக அவர் என் மனதில் நிற்கிறார். படம் நன்றாக வரும், அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்னு சொல்லியிருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
எதிர்ப்பு இல்லாமல் எந்த தமிழ் சினிமாதான் ஜெயிச்சிருக்கு. முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவிச்சிருக்கார். விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர், பண்பாடு மற்றும் மனித நேயமிக்க மனிதர். அப்படிப்பட்ட ஒருவர் முத்தையா முரளிதரன் போன்ற ராஐபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனையை அளிப்பதாகவும் உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு ஒரு தமிழினத் துரோகியை நல்லவனாக அல்லது நாயகனாக காட்ட முயலுவது வரலாற்று பிழையாகதான் முடியும் அப்படின்னு தன்னோட அறிக்கையில சொல்லியிருக்கார்.

தமிழராக வாழாத முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் இரண்டு சிங்கள கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார். தமிழர் என்று சொல்லிக்கொள்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் பேசிய போது தனக்கு தமிழ் தெரியாது என்று சிங்களத்தில் பேசினார். அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முரளிதரனை அடிக்கப் பாய்ந்தனர்.

தமிழர்கள் விரும்பமாட்டார்கள்
லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே என்று முத்தையா முரளிதரன் பாராட்டினார். இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள்.
அப்படின்னு வன்னி அரசு தன்னோட முகநூல் பக்கத்தில பதிவு பண்ணியிருக்கிறார்.

நடிப்பாரா மாட்டாரா?
விஜய் சேதுபதி இந்த படத்தில நடிப்பாரா மாட்டாரா? அப்படிங்கிறது அவரோட முடிவுலதான் இருக்கு. இப்பத்தானே முதல் எதிர்ப்பு வந்திருக்கு. ஒரு கலைஞனா விஜய் சேதுபதி தான் தேர்வு செய்யும் கதாபாத்திரத்தில கவனம் செலுத்துவார். முத்தையா முரளிதரனோட வாழ்க்கை வரலாறு படம் எந்த எதிர்ப்பும் இல்லாம தியேட்டருக்கு வருமா ரசிகர்களோட வரவேற்பு எப்படி இருக்கும் பொருத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











