Don't Miss!
- News முரசா? பம்பரமா? தேமுதிக வேட்பாளருக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்ட சிவி சண்முகம்! சமாளித்தது தான் ஹைலைட்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரியல் ஹீரோவான மாதவன் மகன்.. நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!
சென்னை: வாரிசு நடிகர்கள் பிரச்சனை நாடு முழுவதும் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், சினிமாவில் திணிக்காமல் தனது மகனை அவர் விருப்பத்திற்கு ஏற்ப விட்டு விட்டார் நடிகர் மாதவன்.
நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தற்போது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
தனது மகன் மற்றும் மகனுடைய நண்பர்களையும் பாராட்டி மாதவன் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
மாதவன் மகன்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகர் மாதவனுக்கும் சரிதாவுக்கும் 1999ம் திருமணம் ஆனது. இருவருக்கும் வேதாந்த் எனும் மகன் உள்ளார். அப்பாவை போல சினிமா பக்கம் வராமல் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் விளையாட்டு துறையில் கலக்கி வருகிறார்.
வெண்கலப் பதக்கம்
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். அந்த சந்தோஷமான விஷயத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார்.
கோல்டு மெடல்
மேலும், மாதவன் மகன் வேதாந்த்தின் நண்பனான சஜன் பிரகாஷ் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் முதலிடத்தையும் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
மாதவன் பாராட்டு
தனது மகன் மற்றும் மகனின் நண்பர்களான சஜன் பிரகாஷ், தனீஷ் ஜார்ஜ் மேத்யூ (வெண்கலப் பதக்கம்) உள்ளிட்ட மூவரையும் பாராட்டி உள்ளார் நடிகர் மாதவன். மேலும், இவர்களுக்கு பயிற்சி கொடுத்த பிரதீப் சார், பீட்டர் சார், சதீஷ் சார், முருகேஷ் சார் உள்ளிட்டோருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் பட்டம்
சமீபத்தில் நடிகர் மாதவனுக்கு மகாராஷ்ட்ராவை சேர்ந்த டி.ஒய். பட்டீல் கல்வி நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது. அதன் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின. மாதவன் இயக்கி நடித்து வரும் ராக்கெட்டரி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.