»   »  வேதாளம்... கணக்கு சரிதானான்னு ஒருமுறை பாத்துக்கங்க ட்விட்டர் பிள்ளைகளே!!

வேதாளம்... கணக்கு சரிதானான்னு ஒருமுறை பாத்துக்கங்க ட்விட்டர் பிள்ளைகளே!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் லிங்கா மற்றும் விஜய் நடித்த கத்தி படங்களின் வசூல் சாதனைகளை அஜீத்தின் வேதாளம் முறியடித்துவிட்டதாக சிலர் ட்விட்டரில் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் லிங்கா படம் முதல் நாளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உலக அளவில் 33 கோடியை வசூலித்தது. இது அந்த ஆண்டின் மிகப் பெரிய முதல் நாள் வசூலாகும். இந்தப் படம் தமிழில் மட்டும் ரூ 15.8 கோடியை வசூலித்தது, வெளியான முதல் நாளில்.


Vedalam box office: Is the figure correct?

அடுத்து விஜய் நடித்த கத்தி படம். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் முதல் நாளில் ரூ 15.5 கோடியை வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் அஜீத் நடித்த வேதாளம் இந்த இரண்டு படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்ததாக சிலர் ட்விட்டரில் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.


உங்க பாக்ஸ் ஆபீஸ் கணக்கு சரிதானான்னு ஒரு முறை பாத்துக்கங்க ட்விட்டர் பிள்ளைகளே!

English summary
According to few reports, Ajith's Vedalam has surpassed Lingaa, Kaththi box office records on the first day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil