கன்னடத்தில் ரீமேக்காகும் வேதாளம்.. அஜீத் வேடத்தில் புனித் ராஜ்குமார்!

By Manjula

சென்னை: அஜீத் நடிப்பில் கடந்த தீபவாளியன்று வெளியாகி வெற்றிபெற்ற வேதாளம் தற்போது கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம்.

Vedalam Remade in Kannada Language?

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். வீரம் படத்தைத் தொடர்ந்து சிவா - அஜீத் கூட்டணியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவிருப்பதாகவும், இதனை ஏ.எம்.ரத்னமே தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இப்படத்தை பிரபல இயக்குநர் நந்தா கிஷோர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தற்போது சபரிமலை சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்ததும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

கன்னட சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் புனித் ராஜ்குமார் ஏற்கனவே தமிழில் வெளியான நாடோடிகள் படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X