வேடன், அறிவு, அசல் கோலார்.. அடேங்கப்பா ஒன்று சேர்ந்த மூன்று ராப் இசை கலைஞர்கள்!
சென்னை: தென்னிந்திய ஹிப்-ஹாப் உலகை ஒன்றிணைக்கும் "வணக்கம் வணக்கம் பெங்களூர்" விழா, ஏப்ரல் 11ஆம் தேதி பெங்களூரில் உள்ள பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மூன்று மாநிலங்களைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் ரசிகர்களுக்கு ஓர் அதிரடி அனுபவத்தை வழங்கினர்.
வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி, டகால்டி ஆகியோரின் நிகழ்ச்சிகள், அறிவு, அசல் கோலார் போன்ற தமிழ் கலைஞர்களின் சிறப்புப் படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மலையாளம், கன்னடம், தமிழ் ஹிப்-ஹாப் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து, மொழி, கலாச்சார எல்லைகளைக் கடந்த சமூக இணைப்பு விழாவாக இது அமைந்தது. திரளான ரசிகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Alt+ மற்றும் The High Culture இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழா, தென்னிந்திய இன்டிபெண்டென்ட் ஹிப்-ஹாப் இயக்க வளர்ச்சிக்கு ஒரு மைல்கல். கலைஞரான வேடனின் "வணக்கம் வணக்கம்" மேடை வரியின் அடிப்படையில் உருவான இந்த டூர் ஐபி, இளைஞர்களிடையே வலுவான கலாச்சார அடையாளமாக மாறியுள்ளது.

பெங்களூர் வெற்றியைத் தொடர்ந்து, "வணக்கம் வணக்கம் சென்னை" அடுத்தகட்டமாக விரைவில் நடைபெறும். இதைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், அதைத் தாண்டி உலக அளவிலும் இந்த இசைப் பயணம் விரிவடையும் என அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











