அழகாக ஆடவைக்கும் பாட்டு.. 'குட்டி ஸ்டோரி'க்கு இந்த ஹீரோயினும் டான்ஸ்.. லைக்ஸ் அள்ளும் நடிகை!
சென்னை: விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிரபல நடிகை ஆடியுள்ள டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
வில்லனாக, விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

குட்டி ஸ்டோரி
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி என்ற பாடல் செம ஹிட்டாகியுள்ளது.

அதிகமான லைக்ஸ்
காதலர் தினத்தன்று வெளியான இந்தப் பாடலை, விஜய் பாடியுள்ளார். லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடல், 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

நடிகைகள் டிக்டாக்
இந்தப் பாடலுக்கு நடிகை சிம்ரன் உட்பட பல நடிகர், நடிகைகள் டிக்டாக் செய்துள்ளனர். வெளிநாடுகளிலும் இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டில் சிலர் சாலையில், இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்தப் பாடலை பாடும் வீடியோவும் வேகமாக பரவியது.

முடிச்சு விடுங்க
இப்போது நடிகை வேதிகா இந்தப் பாடலை டிக்டாக்கில் பாடி ஆடியுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். சிலர் அதிரடியாக கமென்ட் போட்டுள்ளனர். பத்தாயிரம் லைக்ஸ் கன்பர்ம். தளபதி ரசிகர்கள் முடிச்சு விடுங்க என்று ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அதையும் தாண்டி சென்றிருக்கிறது, லைக்ஸ்.


Click it and Unblock the Notifications











