ஓரக்கண்ணால் லுக்கு விட்டு போனி டைல் போடும் பரதேசி நடிகை!
சென்னை : தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை மிகப் பிரமாதமாக வெளிக்கொண்டுவரும் திறமைமிக்க நடிகை வேதிகா.
பல கமர்சியல் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பரதேசி மற்றும் காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பலரது பாராட்டுக்களுக்கு தீனி போட்டது.
தற்போது சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் வேதிகா ஓரக்கண்ணால் லுக்கு விட்டு போனிடைல் போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கட்டிப் போட்டுள்ளார்.

சில திரைப்படங்கள் மட்டுமே
ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த மதராசி படத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை வேதிகா அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முதன்முறையாக இயக்குனராக தமிழில் அறிமுகமான முனி திரைப்படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டார். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை மிகப் பிரமாதமாக வெளிக்கொண்டுவரும் இவரின் திறமைக்கு தீனி போடும் வகையில் சில திரைப்படங்கள் மட்டுமே அமைந்தது என சொல்லலாம்.

சற்று கூடுதலாகவே
அந்த வகையில் பல படங்களில் க்யூட்டான கதாநாயகியாக வந்து மனதை கொள்ளையடித்த வேதிகா பாலாவின் பரதேசியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். பொதுவாக பாலாவின் திரைப்படங்கள் என்றாலே இதில் நம்பகத்தன்மை சற்று கூடுதலாகவே இருக்கும் ஆனால் இதில் வேதிகாவை மேக்கப்பில் டோட்டலாக மாற்றியதோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஹோம் மினிஸ்டர்
தமிழைப் போலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு சேர உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இதைத்தவிர கன்னடத்தில் ஹோம் மினிஸ்டர் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஓரக்கண்ணால் லுக்கு
சமீபகாலமாக நடிகைகள் பலரும் சாரைசாரையாக மாலத்தீவுக்கு படையெடுக்க அங்கும் அட்டன்டஸ் போட்ட வேதிகா அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு கண்களுக்கு குளிர்ச்சியான பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்க விட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது கூந்தலை அள்ளி எடுத்து முடிந்து போனி டெயில் போட்டு ஓரக்கண்ணால் லுக்கு விட்டு சிங்கிள் பசங்களை சில்லு சில்லாக சிதற விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications