மாலத்தீவா..? கடலுக்குள் ஃபிளமிங்கோ ஸ்டைலில் ஸ்டன்னிங் போஸ்.. வேற லெவல் பிகினியில் வேதிகா!

By

சென்னை: நடிகை வேதிகா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அர்ஜுன், ஜெகபதிபாபு நடித்த மதராஸி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா.

அடுத்து பாலிவுட்டில் மெகா பட்ஜெட் படம் ஒன்றில் ஒப்பந்தமானார். அது டேக் ஆஃப் ஆகவில்லை என்பதால் தமிழ் சினிமாவுக்கே ரிட்டன் ஆனார்.

காவியத் தலைவன்

காவியத் தலைவன்

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, சிம்புவின் காளை, அருண் விஜய்யின் மலை மலை, பாலாவின் பரதேசி, வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ள வேதிகா, இந்தியில், த பாடி என்ற படத்தில் அறிமுகமானார்.

கொரோனா பிரச்னை

கொரோனா பிரச்னை

த்ரிஷயம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷிகபூர், இம்ரான் ஹாஸ்மி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கில் சில படங்களில் இப்போது நடித்து வரும் வேதிகா, கொரோனா பிரச்னைகள் முடிந்து ஷூட்டிங் தொடங்கும் தினத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கொரோனா காரணமாக பல நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை அதிகமாக செலவழித்து வருகின்றனர். அவர்களில் நடிகை வேதிகாவும் ஒருவர். பலர், தங்களது ஒர்க்கவுட் வீடியோஸ், பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை வேதிகா, அதிக கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில்லை.

வித்தியாச போஸ்

வித்தியாச போஸ்

இந்நிலையில் இப்போது கடலில் நின்றபடி வித்தியாசமான போஸில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான நெட்டிசன்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் திலீப் கூட

நடிகர் திலீப் கூட

இது மாலத்தீவு தானே? என்று ஒருவர் கேட்டிருக்கிறார். இதே போல நிறைய போட்டோஸ் போடுங்க என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு மலையாள ரசிகர், திலீப் கூட ஒரு படத்துல நடியுங்களேன் என்று கூறியுள்ளார். அடுத்து எந்த இந்தி படத்துல நடிச்சிருக்கீங்க? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

ஸ்டன்னிங் லுக்

ஸ்டன்னிங் லுக்

இது என்ன ஃபிளமிங்கோ (செங்கால் நாரை) ஸ்டைலில் ஸ்டன்னிங் லுக் என்று வியந்துள்ளார் ஒரு நெட்டிசன். பல ரசிகர்கள், அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர். ஒரு நெட்டிசன், சொர்க்கத்துல இருந்து வந்தது மாதிரி இருக்கீங்க. அள்ளுது போங்க அழகு என்று கூறியுள்ளார். இந்த புகைபடங்கள் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X