குமரியிலிருந்து ரிஷிவந்தியம் வரை....: வடிவேலு தேர்தல் பிரச்சார விவரம்

By Sudha

சென்னை: திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் நடிகர் வடிவேலு, விஜய்காந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தனது கடைசி நாள் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

நடிகர் வடிவேலு தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

1-ந் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் பிரச்சாரம் தொடங்கும் வடிவேலு, நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பேசுகிறார்.

2-ந் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டை, வல்லநாடு, கருங்குளம், தூத்துக்குடியிலும், மாலை 4 மணிக்கு குறுக்குச்சாலை, எட்டையாபுரம், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகி இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

3-ந் தேதி காலை 9 மணிக்கு டி.கல்லுபட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், பைகாரா, பழங்காநத்தம் ஆகிய இடங்களிலும், மாலை 4 மணிக்கு காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை, ரெட்டியப்பட்டி, கமுதி, மானாமதுரை, திருப்பத்தூர், எஸ்.எஸ்.கோட்டை, கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை ஆகிய இடங்களிலும், 4-ந் தேதி காலை 9 மணிக்கு தினமணி டாக்கீஸ், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், டி.எம்.கோர்ட், மேலமாசிவீதி, விநாயகர்கோவில் ஆகிய இடங்களிலும், மாலை 4 மணிக்கு மேமடை, புதூர், அய்யர் பங்களா, ஆனையூர், கூடல்நகர், விளாங்குடி, பரவை, சமயநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், கொடிமங்கலம், துவரிமான், கோச்சடை, காளவாசல் ஆகிய இடங்களிலும் பேசி வாக்கு கேட்கிறார்.

11-ந் தேதி ரிஷிவந்தியம்

5-ந் தேதி காலை 9 மணி- விராட்டிபத்து, அச்சம்பத்து நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, கண்டமனூர், கொடுவிலார்பட்டி.

மாலை 4 மணி- தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், போடி, தேனி அல்லிநகரம், பெரியகுளம், வத்தலகுண்டு. 6-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும். 7-ந் தேதி காலை 9 மணி- பள்ளபட்டி, பரமத்தி, கரூர் டவுன், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், திருச்சி. மாலை 4 மணி- விராலிமலை, இழுப்பூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

8-ந் தேதி காலை 9 மணி- கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர். மாலை 4 மணி- தஞ்சை மாவட்டம். 9-ந் தேதி காலை 9 மணி- பாபநாசம், கும்பகோணம். மாலை 4 மணி- திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர். 10-ந் தேதி-கடலூர் மாவட்டம் முழுவதும்.

11-ந் தேதி முழுவதும் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவரை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X