வீணா மாலிக் கைது... ஹைதராபாத் சிறையில் அடைப்பு!!!

By Mayura Akilan

ஹைதராபாத்: பாலிவுட் கவர்ச்சிப்புயல் வீணா மாலிக் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். ஹோல்டான்.. ஹோல்டான்...வீணாவின் ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். இது ஜஸ்ட் சினிமா சூட்டிங்தான்...

ஹைதராபாத்தில் மையம் கொண்ட கவர்ச்சிப் புயல்

ஹைதராபாத்தில் மையம் கொண்ட கவர்ச்சிப் புயல்

பாலிவுட்டில் நடித்து வரும் கவர்ச்சி நாயாகி வீணா மாலிக், முதல் முறையாக நக்னா சத்யம் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. அதற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார் வீணா.

கைது சீன்.. சிறையில் வீணா

கைது சீன்.. சிறையில் வீணா

இந்த படத்தில் வீணா கைதாகி ஹைதராபாத் சிறையில் அடைக்கப்படுவது போல ஒரு காட்சி வருகிறது. இதற்கான படப்பிடிப்புதான் சமீபத்தில் நடைபெற்றது.

இழுத்துச் சென்றனர்

இழுத்துச் சென்றனர்

கைது செய்யப்படும் சீனில் வீணா மாலிக்கை பெண் போலீஸார் மற்றும் ஆண் போலீஸார் இழுத்துச் செல்வதுப போல படமாக்கினர்.

அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை

காட்சியில் நடித்து முடித்த பின்னர் வீணாமாலிக் கூறுகையில், தனக்கு இது புது அனுபவம் என்றார். ஜெயிலில் நான்கு சுவர்களுக்குள் இருப்பது மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் நீக்கிவிடும். ஆனால் இந்த அனுபவம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

ராமாராவ் வீட்டில் வீணா

ராமாராவ் வீட்டில் வீணா

'நாக்னா சத்யம்' படத்தை ராமராவ் இயக்கிவருகிறார். இதையொட்டி சமீபத்தில், தீபாவளி தினத்தில் அவரது வீட்டிற்குச் சென்ற வீணா, பட்டாசு வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் தீபாவளி கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம்.

கின்னஸ் சாதனையில் வீணா

கின்னஸ் சாதனையில் வீணா

இந்த படத்தைத் தொடர்ந்து வீணா பாலிவுட்டில் ‘தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இது பல்வேறு கின்னஸ் சாதனைகளை முறியடிக்க உள்ள படமாம். ஏகப்பட்ட கவர்ச்சிக் கன்னிகளை உள்ளடக்கி படு கவர்ச்சிகரமாக இதைப் படமாக்கி வருகிறார் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X