இந்திய ராணுவத்திற்கு நடுவிரலை காட்டிய பாக். நடிகை: விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

சென்னை: காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நடிகை வீணா மாலிக் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்தி ட்வீட் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் ஊடுருவி நாச வேலை செய்ய முயன்ற பாகிஸ்தான் சிறப்பு படையை சேர்ந்த 7 பேரை நம் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வெள்ளைக் கொடியை ஏந்தி வந்து அவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட், சாண்டல்வுட் படங்களில் நடித்த மற்றும் இந்தி பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீணா மாலிக் இந்திய ராணுவத்தை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.

வீணா மாலிக்

இந்திய ராணுவத்திற்கு நடுவிரலை காட்டி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வீணா மாலிக். அதை பார்த்த இந்தியர்கள் கொந்தளித்து வீணா மாலிக்கை விளாசித் தள்ளியுள்ளனர். இப்படி ஏதாவது சர்ச்சையை கிளப்புவது தான் வீணாவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ வீரர்கள்

நீங்கள் புகைப்படத்தில் காட்டியுள்ளதை தான் இந்திய ராணுவம் உங்களின் சிறப்பு படையினருக்கு செய்துள்ளது. பட்டாலும் திருந்தாதவர்கள் நீங்கள். உங்களுக்கு வேறு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது என இந்தியர்கள் வீணா மாலிக்கை விளாசியுள்ளனர்.

பத்திரிகை

வீணா மாலிக் பிக் பாஸ் வீட்டில் நடிகர் அஷ்மித் பட்டேலுடன் நெருங்கிப் பழகியதை நினைவு கூர்ந்தும், பத்திரிகைக்காக டாப் லெஸ்ஸாக போஸ் கொடுத்ததையும் பற்றி இந்தியர்கள் விமர்சித்துள்ளனர். உங்களிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்துவிடாதீர்கள் என்று இந்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

திறமை

முதலில் உங்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு அதன் பிறகு உலகின் மிகவும் திறமையான ராணுவம் பற்றி கமெண்ட் செய்யலாம் என இந்தியர்கள் வீணா மாலிக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் அவர் பாலிவுட்டில் அரைகுறை ஆடையில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இதற்கு பெயர் தான் நடிப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X