48 வயதில் 4வது குழந்தை.. பொண்டாட்டிக்கிட்ட கேட்கப்போறேன்.. வீர தீர சூரன் நடிகரின் பேராசை.. ஏன்?
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு நடித்துள்ளார். ஏற்கனவே தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் நான்காவதாக ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள தனது மனைவியிடம் கேட்கப் போவதாகவும் நேற்று நடைபெற்ற வீர தீர சூரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
என்ன மனுஷன் இவர் இப்படி பொளந்து கட்டுறாரே என சோசியல் மீடியா முழுவதும் வீர தீர சூரன் படத்துக்கு ஒரே ஆளாக இவர் புரமோஷன் செய்து வருகிறாரே என சியான் விக்ரம் ரசிகர்களே வாய் அடைத்து போய் உள்ளனர்.

இந்த மாதம் 27ஆம் தேதி சியான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் திரைக்கு வருகிறது. அதே நாளில் வெளியாகவுள்ள மோகன்லால் நடித்துள்ள மலையாளத் திரைப்படமான எம்புரான் படத்திலும் சுராஜ் வெஞ்சரமுடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டபுள் தமாக்கா: எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து வீர தீர சூரன் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அவரைப் போலவே மல்டி டேலன்ட்டட் ஆன மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு நடிப்பில் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. சுராஜ் வெஞ்சரமுடு ரசிகர்களுக்கு வரும் மார்ச் 27ஆம் தேதி டபுள் தமாகா காத்திருக்கிறது.
4வது குழந்தை பெத்துக்க ரெடி: சென்னை ஆவடி அருகே உள்ள வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற வீர தீர சூரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சியான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சரமுடு சீக்கிரமே தனது மனைவியிடம் சொல்லி நான்காவது குழந்தையை பெத்துக்க தயார் என பேசி ஒட்டுமொத்த அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.
எதுக்கு 4வது குழந்தை?: மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு மேடை ஏறிப் பேசும்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதலாவது மகன் பிறக்கும்போது தனக்கு மாநில விருது கிடைத்தது, இரண்டாவது பையன் பிறக்கும்போது மீண்டும் மாநில விருது கிடைத்தது. மூன்றாவது ஆக மகள் பிறக்கும்போது மாநில விருது மற்றும் தேசிய விருது சேர்த்தே கிடைத்தது. இது நல்லா இருக்கே என்று தோன்றுகிறது. அடுத்ததாக ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருந்தால் மனைவியிடம் சொல்லி நான்காவது குழந்தையையும் பெத்துக்க ரெடி என கலகலப்பாக பேசியுள்ளார்.
சுராஜ் வஞ்சரமுடுவின் குடும்பம்: 2001 ஆம் ஆண்டு வெளியான லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் படத்தின் மூலம் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். 2013 ஆம் ஆண்டு வெளியான பேரறியாதவர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அந்த படம் இவரது 200 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 1976 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த சுராஜ் வெஞ்சரமுடு 2005 ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு காசிநாதன், வாசுதேவ் மற்றும் ஹிருதயா என மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் காசிநாதன் 'அண்ணன் தம்பி' மற்றும் 'தேஜாபாய் அண்ட் பேமிலி' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான இவரது அடியோஸ் அமிகோ படமெல்லாம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











