Veera Dheera Sooran BO Prediction: முதல் நாளே முடிச்சு விட்டாய்ங்க.. வீர தீர சூரன் வசூல் அவ்வளவுதானா?
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் போடப்பட்ட வழக்கு காரணமாக திட்டமிட்டபடி படம் 9 மணிக்கு வெளியாகவில்லை. காலை 11.30 மணிக்கு மேல் தான் பல திரையரங்குகள் டிக்கெட் புக்கிங்கை தற்போது மாற்றி அமைத்திருக்கின்றன. காலை காட்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பயங்கர கடுப்பில் ரிஃபண்ட் கேட்டு திரையரங்குகளை முற்றுகையிட்டுள்ளனர்.
காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதியம் மற்றும் மாலை நேர காட்சிகளும் பெரிதளவில் புக் மை ஷோ உள்ளிட்ட எந்தவொரு புக்கிங் வெப்சைட்டுகளிலும் புக் ஆகவில்லை என்பது தான் கொடுமையான விஷயமாக மாறியிருக்கிறது.

அனைத்து காட்சிகளும் தற்போது பச்சை நிறமாகவே காட்சியளித்து வருவது சியான் விக்ரம் ரசிகர்களையும் வீர தீர சூரன் டீமையும் ரொம்பவே பாதித்துள்ளது. மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறவேண்டிய ஒரு படத்தை முதல் நாளே இப்படி முடித்து விட்டார்களே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
எம்புரான் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?: தமிழ்நாட்டில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் டிக்கெட் புக்கிங்கும் பெரிதளவில் இல்லை. ஒரு சில தியேட்டர்களில் ஆரஞ்சு நிறத்தில் டிக்கெட் புக்கிங் காணப்படுகிறது. மற்றபடி அனைத்து தியேட்டர்களிலும் இதுவரை க்ரீன் டோனில் தான் திரையரங்க டிக்கெட் புக்கிங் உள்ளன. மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் எம்புரான் படத்திற்கு போதுமான அளவில் டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீர தீர சூரன் நிலைமை மோசம்: ஆனால், சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தின் டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் படுமோசமான நிலையில் உள்ளது ரசிகர்களையும் திரை வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே பெரியளவில் புரமோஷன் செய்தும் சியான் விக்ரம் படத்தை முதல் நாளே பார்க்க ரசிகர்கள் ஆர்வம் செலுத்தாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மாத கடைசி: மார்ச் 27ம் தேதி மாத கடைசியில் சியான் விக்ரம் படம் அதுவும் எந்தவொரு பண்டிகை தினமும் இல்லாமல் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் தான் இந்த நிலமை என்கின்றனர். தமிழ்நாட்டிலேயே இந்த படத்துக்கு டிக்கெட் புக்கிங் டல் அடித்துள்ள நிலையில், பக்கத்து ஸ்டேட் நிலவரங்கள் இன்னமும் மோசமாக இருப்பதாக கூறுகின்றனர்.
பாசிட்டிவ் விமர்சனம் வந்தால் தான்: சித்தா படத்திற்கு பிறகு அருண் குமார் இயக்கியுள்ள வீர தீர சூரன் 2ம் பாகம் திரைப்படத்தை பார்த்தவர்கள் பாராட்டினாலும் பொதுமக்கள் தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தால் தான் வெள்ளி, சனி, ஞாயிறு என வீக்கெண்டில் படத்தின் வசூல் பிக்கப் ஆகும் என்கின்றனர். ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கிடைக்கும் ஓபனிங் சியான் விக்ரமுக்கு கிடைக்காமல் போக காரணம் பாக்ஸ் ஆபீஸில் பல ஆண்டுகளாக அவரது படங்கள் சொதப்பி வருவது தான் என்கின்றனர். பொன்னியின் செல்வன் படங்கள் மட்டுமே விக்ரமுக்கு வசூல் ரீதியான வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் கணிப்பு: சியான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 2 முதல் 3 கோடி ரூபாய் வசூலை அள்ள வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். படத்துக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தால் தான் அதிக கலெக்ஷனை இந்த படம் அள்ளும்.


Click it and Unblock the Notifications











