தங்கலானுக்கு வந்த தலைவலி..வீர தீர சூரன் நாளை வெளியாகுமா?.. கடைசி நேர பஞ்சாயத்து!

சென்னை: சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் முதல் 20 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க என்று இயக்குநர் தெரிவித்திருந்தார். இப்படம் தூள், சாமி படத்தை பார்த்த பீல் வரும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருந்தார். இதனால், இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், விக்ரம் படத்தை காண காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. இப்படம் வெளியாவதில் சிக்கல் என கூறப்படுகிறது.

மதுரையை பின்னணியாக கொண்டு தரமான கேங்ஸ்டர் படமாக வீர தீர சூரன் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு இரவில் நடக்கும் பக்கா ஆக்சன் படமாக வீர தீர சூரன் உருவாகியிருக்கிறது. படத்தின் டிரெய்லரில் போலீசுக்கே பயம் காட்டும் கேங்ஸ்டராக விக்ரம் இருக்கிறார். ரசிகர்களை பாேன்றே இயக்குநர் அருண்குமார், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா ஆகியாேர் திரையில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸை காண காத்திருக்கின்றனர்.

veera-dheera-sooran-movie-faces-problems-release

ரொமான்ஸ்: சீயான் விக்ரமிற்கு சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் தோல்வியடைந்தது. வீர தீர சூரன் படம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். மேலும், படக்குழுவினரும் ஹைதராபாத், கேரளா போன்ற மாநிலங்களில் பட புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். சமீபத்தில் கோவை சென்றிருந்தனர். அங்கு திரை ரசிகர்கள் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், மதுரையில் வீர தீர சூரன் பட நாயகி துஷாரா விஜயன் ஜாலியாக விக்ரமுக்கு கவிதை சொல்லி ரொமான்ஸ் செய்த சம்பவங்களும் வீடியோவாக வெளியானது.

veera-dheera-sooran-movie-faces-problems-release

வீர தீர சூரனுக்கு சிக்கல்: ஆனால், வீர தீர சூரன் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு மும்பையை சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் பண முதலீடு செய்திருக்கிறது. இதனால், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் அந்த நிறுவனத்த்திற்கு எழுதி கொடுத்துவிட்டாராம். ஆனால் அக்ரிமெண்டில் உள்ளபடி இன்னும் படம் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை. அதற்குள் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்து, ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. இந்த நேரத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் ஓடிடியில் விற்க முடியவில்லை. இப்படத்திற்கு முதலீடு செய்த தொகையில் 50% தங்களுக்கு நஷ்டம் என B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தெரிவித்திருக்கிறது.

ரிலீஸ் ஆகுமா: ஆனால், இந்நிறுவனம் தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
நாளை காலை 10.30 வரை வீர தீர சூரன் படத்தை வெளியிடக்கூடாது என இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்திருப்பதால் பெரும் சிக்கல் எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதேபோன்று விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படமும் இதே தலைவலியை சந்தித்தது. தயாரிப்பு நிறுவனத்தால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு பின்பு வெளியானது.

veera-dheera-sooran-movie-faces-problems-release

துருவ நட்சத்திரம்: விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் இதே பிரச்னையை சந்தித்து வருகிறது. இதுவரை இப்படத்திற்கான பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. குறிப்பாக விக்ரம் நடிக்கும் படங்களே இப்படித்தான் பல பஞ்சாயத்துகளை சந்தித்து வருகிறது. ஒருவேளை அவரை தேடி பிரச்னை வருகிறதா அல்லது நல்ல புரொடக்சனை விக்ரம் தேடி செல்வதில்லையா என்ற பேச்சும் அடிபடுகிறது. இதே தலைவலியுடன் ஒவ்வொரு படத்திற்கும் விக்ரம் பிரச்னைகளை சந்திக்கிறார். ஒவ்வொரு படத்திற்கு உடல் உழைப்பை செலுத்தும் விக்ரமிற்கா இப்படி நடப்பது என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். மேலும், நாளை வீர தீர சூரன் வெளியாகுமா அல்லது ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புக்கிங் செய்த ரசிகர்களின் தலையில் இப்படியா இடியை இறக்குவது என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

FAQs
விக்ரம் நடித்த தூள் படத்தை இயக்கியவர் யார்?

தரணி

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X