Veera Dheera Sooran: 48 மணி நேரம் கெடு.. டெல்லி நீதிமன்ற போட்ட உத்தரவு.. சிக்கலில் வீர தீர சூரன்!
டெல்லி: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம். எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் இன்று அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இப்படியான நிலையில், படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல், படத்தை ரிலீஸ் செய்வதாக கூறி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒரு நிறுவனமான, B4U என்ற தயாரிப்பு நிறுவனம் தற்போது படத்தின் ரிலீஸ்க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. அதாவது B4U நிறுவனம், படத்தில் முதலீடு செய்த பணத்திற்காக, படத்தின் ஓடிடி உரிமத்தை மொத்தமாக படத்தின் தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார். இப்படியான நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்வதற்கு முன்னரே, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, அதற்கான பணிகளையும் செய்துள்ளார்கள். இப்படியான நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தீர்மானிக்காமல், தியேட்டர் ரிலீஸ் தேதியை தீர்மானித்ததால், B4U நிறுவனத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அந்த நிறுவனம் வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

இப்படியான நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அதில் படத்தை இன்று அதாவது மார்ச் 27ஆம் தேதி காலை 10.30 மணி வரை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது, டெல்லி உயர்நீதிமன்றம். இப்படி இருக்கும்போது இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தற்போது டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் உடனடியாக ரூபாய் 7 கோடிகளை டெபாசிட் செய்யவும், படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் அதாவது 2 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. எனவே படத்தை பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டெல்லி நீதிமன்றம் முதற்கட்ட விசாரணையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது கட்ட விசாரணையில், படத்தை 4 வாரங்களுக்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பான தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியும் படம் ரிலீஸ் ஆகிவிடும், எனவே படத்தை பார்த்துவிட்டுத்தான் இன்றைக்கு வீட்டுக்குப் போவோம் என நம்பிக்கையோடு இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் படத்தின் காலை காட்சிகளும் மதிய காட்சிகளும் என தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இது படத்தின் வசூலில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மேலும், பிற்பகல் 3 மணிக்கு இருதரப்பினரும் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால், படம் இன்று அதாவது மார்ச் 27ஆம் தேதி மாலையில் இருந்து திரையிட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











